உரிமமின்றி 431,000 முகக்கவசங்களைத் தயாரித்த நிறுவனத்துக்கு $8,000 அபராதம்

முகக்­க­வ­சங்­களை உற்­பத்தி செய்த 'ஃபர்ஸ்ட் என்-லேப்' எனும் நிறு­வ­னம் தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஒன்­றில் இடம்­பெற்­ற­தைத் தொடர்ந்து, சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் அத­னி­டம் நடத்­திய விசா­ர­ணை­யில் முகக்­க­வ­சங்­களைத் தயா­ரிக்க அந்­நி­று­வ­னத்­தி­டம் உரி­மம் இல்லை என கண்­ட­றி­யப்­பட்­டது.

அந்­நி­று­வ­னம் உரி­ம­மின்றி குறைந்­தது 431,480 முகக்­க­வ­சங்­களைத் தயா­ரித்­தது தெரி­ய­வந்தது. இந்த மாதம் 23ஆம் தேதி அந்­த நி­று­வ­னத்­துக்கு $8,000 அபராதம் விதிக்­கப்­பட்­டது.

நீதி­மன்­றத்­தில் அந்­நி­று­வ­னத்­தைப் பிர­தி­நி­தித்த அதன் இயக்­கு­நர் கோ ஹோங் மெங் (படம்), சுகா­தா­ரப் பொருள்­கள் சட்­டத்­தின்­கீழ் சுமத்தப்பட்ட ஒரு குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்­டார்.

2020 ஏப்­ரல் 6ஆம் தேதி ஃபர்ஸ்ட் என்-லேப் நிறு­வ­னம் அமைக்­கப்­பட்­டது. கொவிட்-19 பெருந்­தொற்­றின்­போது சீனா­விடமிருந்து முகக்­க­வ­சங்­க­ளைத் தயா­ரிக்­கும் இயந்­தி­ரத்தை அந்நிறு­வ­னம் வாங்­கி­ய­தாக சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தின் வழக்­கறிஞர் விஷ்ணு ஆதித்­திய நாயுடு நீதி­மன்­றத்­தில் கூறி­னார்.

2021 மே 18ஆம் தேதி சேனல் 8 ஒளி­வ­ழி­யில் ஃபர்ஸ்ட் என்-லேப் இடம்­பெற்­ற­தைத் தொடர்ந்து, அந்நி­று­வ­னம் பற்றி சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தின் மருத்­து­வச் சாத­னங்­கள் பிரி­வின் கவ­னத்­துக்குக் கொண்டுவரப்பட்டது.

முகக்­க­வ­சங்­க­ளைத் தயா­ரிப்­பதற்கு அந்­நி­று­வ­னத்­தி­டம் உரி­மம் இல்­லா­தது மருத்­து­வச் சாத­னங்­கள் பிரி­வுக்கு தெரி­ய­வந்­தது. அந்நி­று­வ­னம் சரி­யாக பதி­ல­ளிக்­கா­த­தைத் தொடர்ந்து ஆணை­யத்­தின் அம­லாக்­கப் பிரி­வி­டம் இது­பற்றி தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது.

கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி ஃபர்ஸ்ட் என்-லேப் நிறு­வனத்­தின் வளா­கத்­தில் அதி­காரிகள் சோதனை செய்­த­னர். இதில் மொத்­தம் 323,870 முகக்­க­வ­சங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

2020 அக்­டோ­பர் முதல் கடந்த ஆண்டு ஏப்­ரல் வரை உரி­ம­மின்றி முகக்­க­வ­சங்­க­ளைத் தயா­ரித்த அந்­நி­று­வ­னம், 2020 நவம்­பர் 30ஆம் தேதிக்கும் கடந்த ஆண்டு மே 24ஆம் தேதிக்கும் இடைப்­பட்ட காலத்­தில் 107,610 முகக்­க­வ­சங்­களை $14,492.90க்கு விற்­பனை செய்­தது.

தேவை­யான உரி­மத்­தைப் பெற ஒரு­வழியாக ஆணை­யத்­தி­டம் விண்­ணப்­பித்த அந்­நி­று­வ­னம், கடந்த ஆண்டு செப்­டம்­பர் 22ஆம் தேதி அதைப் பெற்­றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!