மின்சிகரெட்டுகள் விற்பனை: 17 பேருக்கு அபராதம், அவர்களில் ஐவருக்குச் சிறை

மின்சிகரெட்டுகள் விற்பனை: 17 பேருக்கு அபராதம், அவர்களில் ஐவருக்குச் சிறை

1 mins read
026ff2d3-830c-4cb6-86c5-d1a90a35dbf9
$170,000க்குமேல் மதிப்புடைய மின்சிகரெட்டுகளும் அவை தொடர்பான கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. படம்: சுகாதார அறிவியல் ஆணையம் -

மின்­சி­க­ரெட்­டு­களை விற்­பனை செய்­த­தற்­காக 17 பேருக்கு $114,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­களில் ஐவ­ருக்­குக் கூடு­த­லாக சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அவர்­க­ளி­டம் இருந்து $170,000க்கு­மேல் மதிப்­பு­டைய மின்­சி­க­ரெட்­டு­களும் அவை தொடர்­பான கரு­வி­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தாக சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது. இவற்­றில் பெரும்­பா­லா­னவை சமூக ஊட­கங்­க­ளி­லும் மின்­வர்த்­த­கத் தளங்­க­ளி­லும் விற்­கப்­பட்­டன.

அந்த 17 பேரு­டைய வயது 20க்கும் 39க்கும் இடைப்­பட்­டவை.

மின்­சி­க­ரெட்­டு­கள், அவை தொடர்­பான சாத­னங்­களை விற்­ற­தற்­காக 2018லிருந்து குறைந்­தது 70 பேருக்கு எதி­ராக ஆணை­யம் வழக்கு தொடர்ந்­துள்­ளது. தான் விதித்­துள்ள ஆகப்­பெ­ரிய அப­ராதத் தொகை $99,000 என்று ஆணை­யம் கூறி­யது.

மின்­சி­க­ரெட்­டு­களை வாங்­கு­வதோ, வைத்­தி­ருப்­பதோ, பயன்­படுத்­து­வதோ குற்­ற­மா­கும்.

2018 பிப்­ர­வ­ரிக்­கும் கடந்த ஆண்டு டிசம்­ப­ருக்­கும் இடையே இதற்­காக 6,842 பேர் பிடி­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக ஆணை­யம் கூறி­யது.

பிடிபடுபவர்களுக்கு ஒவ்வொரு குற்றத்துக்கும் $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.