மக்கள்தொகை வேகமாக மூப்படைகிறது

குடிமக்களில் 18.4 விழுக்காட்டினர் 65 வயது, அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களாவர்

சிங்­கப்­பூர் மக்­கள்­தொகை வேக­மாக மூப்­ப­டைந்து வரு­கிறது. 65 வயது, அதற்­கும் மேற்­பட்ட வய­து­டைய குடி­மக்­க­ளின் விகி­தம் இவ்வாண்டு 18.4 விழுக்­கா­டாக உயர்ந்­துள்­ளது.

2012ல் இந்த விகி­தம் 11.1 விழுக்­கா­டாக இருந்­த­தாக நேற்று வெளி­யி­டப்­பட்ட மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பு அறிக்கை தெரி­வித்­தது. கடந்த ஆண்டு இந்த விகி­தம் 17.6 விழுக்­கா­டாக இருந்­தது.

2030க்குள் குடிமக்களில் கிட்டத்தட்ட நால்வரில் ஒரு­வர், அல்­லது 23.8 விழுக்­காட்­டி­னர் 65 வயது, அதற்­கும் மேற்­பட்ட வய­து­டை­ய­வர்­க­ளாக இருப்­பர்.

கடந்த ஆண்டு ஜூனுக்­கும் இவ்­வாண்டு ஜூனுக்­கும் இடையே குடி­மக்­கள் மக்­கள்­தொ­கை­யில் இடை­நிலை வயது 42.5லிருந்து 42.8ஆகக் கூடி­யது.

இதற்­கி­டையே 80 வயது, அதற்­கும் மேற்­பட்ட வய­து­டைய குடி­மக்­க­ளின் எண்­ணிக்கை, 2012லிருந்து 70 விழுக்­காட்­டிற்­கு­மேல் அதி­க­ரித்து இவ்­வாண்டு 132,000 ஆனது. மக்­கள்­தொ­கை­யில் இந்த விகி­தம் 3.7 விழுக்­காடா­கும்.

ஜப்­பான், தென்­கொ­ரியா போன்ற மற்ற ஆசிய நாடு­க­ளி­லும் மக்­கள்­தொகை மூப்­ப­டைந்­து­வ­ரும் போக்கு காணப்­ப­டு­கிறது. அந்த நாடு­களில் குழந்­தைப் பிறப்பு விகி­தம் குறை­வாக உள்­ளது.

2020ல் சிங்­கப்­பூர் மக்­கள்­தொகை­யில் 65 வயது, அதற்­கும் மேற்­பட்ட வய­து­டை­ய­வர்­க­ளின் விகி­தம் 17 விழுக்­கா­டாக இருந்­தது.

தென்­கொ­ரி­யா­வில் இந்த விகி­தம் 16 விழுக்­கா­டா­க­வும் ஜப்­பா­னில் இது 29 விழுக்­கா­டா­க­வும் இருந்­தது.

மக்கள்தொகையை தனது முக்கிய வளமாகக் கொண்டிருக்கும் சிறிய நாடான சிங்­கப்­பூ­ரில் மக்கள்­தொகை மூப்­படைந்து வரு­வ­தும் இத­னால் ஏற்­படும் விளை­வுகளும் சிங்­கப்­பூரை இன்­னும் தீவி­ர­மா­க பாதிக்­கும் என்று மக்­கள்­தொகை அறிக்கை குறிப்­பிட்­டது.

இந்த முக்­கிய சவா­லைச் சமா­ளிக்க, திரு­ம­ணத்­தை­யும் பெற்­றோர் பரு­வத்­தை­யும் சிங்­கப்­பூர் தொடர்ந்து ஆத­ரிக்க வேண்­டும் என்று அறிக்கை கூறி­யது.

குடும்­பங்­க­ளைத் தொடங்கி அவற்­றைப் பேணி வளர்ப்­ப­தில் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க அர­சாங்­கம் பல்­வேறு திட்­டங்­களை வகுத்­தி­ருக்­கும் அதே­வே­ளை­யில், குடும்­பங்­க­ளுக்கு உகந்த வலு­வான கட்­ட­மைப்பை உரு­வாக்க முத­லாளி­கள், சமூ­கப் பங்­கா­ளி­கள், தனி­மனி­தர்­கள் என அனை­வ­ரும் தங்­கள் பங்கை ஆற்­ற­லாம் என்று அறிக்கை சொன்­னது.

மூத்­தோர் தன்­னம்­பிக்­கை­யுடனும் நிம்­ம­தி­யு­ட­னும் அர்த்­த­முள்ள வகை­யில் மூப்­ப­டை­வ­தற்­கான ஓர் இல்­ல­மா­க­வும் சிங்­கப்­பூர் விளங்க வேண்­டும் என்று அறிக்கை குறிப்­பிட்­டது.

குடி­மக்­கள் தங்­கள் சுகா­தா­ரத்­தைக் கவ­னித்­துக்­கொண்டு ஆரோக்­கி­யத்­து­டன் நீடித்து வாழ சிங்­கப்­பூர் முன்­னெ­டுத்­து­வ­ரும் முயற்­சி­களை மக்கள்தொகை அறிக்கை சுட்­டி­யது. 'வெற்­றி­க­ர­மாக மூப்­ப­டை­வ­தற்­கான செயல்­திட்­ட­மும்' அடுத்த ஆண்டு தொடங்­கப்­ப­ட­வுள்ள 'மேலும் ஆரோக்­கி­ய­மான எஸ்ஜி திட்­ட­மும்' இவற்­றில் அடங்­கும்.

மக்­கள்­தொகை மூப்­ப­டை­வதாலும் குழந்­தை பிறப்பு விகி­தம் குறை­வாக இருப்­ப­தா­லும் ஏற்­படும் தாக்­கத்தை மட்­டுப்­ப­டுத்த குடி­நுழைவு உத­வு­வ­தாக அறிக்கை குறிப்­பிட்­டது.

கடந்த ஆண்டு 21,537 பேருக்கு குடி­யு­ரி­மை­யும் 33,435 பேருக்கு நிரந்­த­ர­வா­சத் தகு­தி­யும் வழங்­கப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!