ஊழியர் மரணம்: நிறுவனத்துக்கு வேலை நிறுத்த உத்தரவு, அபராதம்

ஊழியர் மரணம்: நிறுவனத்துக்கு வேலை நிறுத்த உத்தரவு, அபராதம்

2 mins read
59a3662d-c4e5-49b6-8d65-d850e6f3492b
பளுதூக்கும் வாகனத்தை வேறோர் இடத்துக்குக் கொண்டுசெல்ல அதை லாரியில் ஊழியர் ஏற்றிக்கொண்டு இருந்தபோது பளுதூக்கும் வாகனம் ஏறியதில் அவர் உயிரிழந்தார். படம்: வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் -

வேலை­யிட விபத்­தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி ஊழி­யர் ஒரு­வர் உயிரி­ழந்­த­தைத் தொடர்ந்து, இதில் சம்­பந்­தப்­பட்ட 'சினர்ஜி-பிஸ்' எனும் நிறு­வ­னத்­துக்கு வேலை நிறுத்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

பாது­காப்பு விதி­மு­றை­கள் மீறி­ய­தற்­காக அந்­நி­று­வ­னத்­துக்கு $6,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.

அந்த ஊழி­யர் மர­ணம் அடைந்­த­தற்கு அடுத்த நாள் அந்த நிறு­வன வளா­கத்­தில் மனி­த­வள அமைச்சு சோதனை நடத்­தி­யது. இதில், ஊழி­யர்­க­ளுக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பாது­காப்­பற்ற சூழல் நில­வி­யது கண்­ட­றி­யப்­பட்­டது.

'சினர்ஜி-பிஸ்' நிறு­வ­னத்­துக்கு வேலை நிறுத்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தால் பாது­காப்­புக் குறை­பா­டு­கள் நிவர்த்தி செய்­யப்­ப­டும்­வரை பணி தொடர்­பான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் அது நிறுத்தி­வைக்க வேண்­டும்.

முன்­ன­தாக, பளு­தூக்கும் வாகனம் ஏறி­ய­தில் அந்­நி­று­வ­னத்­தின் லாரி ஓட்டு­நர் உயி­ரி­ழந்­தார். பளு­தூக்­கும் வாகனத்தை வேறோர் இடத்­துக்குக் கொண்­டு­செல்ல அதை லாரி­யில் அவர் ஏற்றிக்­கொண்டு இருந்­த­போது இந்த விபத்து நிகழ்ந்­தது.

ஊழி­யர்­க­ளுக்கு ஆபத்தை ஏற்­படுத்­தும் பாது­காப்­புக் குறை­பா­டு­கள் பல­வற்­றும் எளி­தில் சரி­செய்­யப்­பட்­டி­ருக்­க­லாம் என்­பது சோத­னை­யில் கண்­ட­றி­யப்­பட்­ட­தாக மனி­த­வள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்­மது கூறி­னார்.

"நிறு­வன நிர்­வா­க­மும் ஊழி­யர்­களும் பாது­காப்பை முக்­கி­ய­மாக எடுத்­துக்­கொள்­வது அவ­சி­யம். இதன் தொடர்­பில் சோத­னை­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்ள நாங்­கள், பாது­காப்­புக் குறை­பா­டு­கள் கண்­ட­றி­யப்­படும் நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றோம்," என்­றார் அவர்.

'ஸ்டார்ட்­சேஃப்' திட்­டத்­தின் மூலம் நிறு­வ­னங்­க­ளுக்கு அமைச்சு ஆத­ர­வ­ளிக்­கும் என்று திரு ஸாக்கி கூறி­னார்.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் வேலை­யி­டப் பாது­காப்­பை­யும் சுகா­தார இடர்­க­ளை­யும் அடை­யா­ளம் கண்டு, சிறந்த பாது­காப்பு நடை­மு­றை­க­ளைச் செயல்­ப­டுத்த இத்­திட்­டம் உத­வு­கிறது.

"சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களுக்­கான ஸ்டார்ட்­சேஃப் முயற்சி­களுக்கு நாங்­கள் கட்­ட­ணக் கழிவு வழங்­கு­வோம். பாது­காப்பு முயற்­சி­களில் எந்­த­வொரு நிறு­வனமோ ஊழி­யரோ பின்­தங்­கி­விடாமல் இருப்­பதை இது உறு­தி­செய்யும்," என்றார் திரு ஸாக்கி.