பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்பாட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்ட, சிங்கப்பூர் உடனான பங்காளித்துவ முயற்சியை விரிவுபடுத்த பிரான்ஸ் முற்படுகிறது.
எரிசக்தி உருமாற்றம், மின்னிலக்கமயமாதலில் தொழில்நுட்பங்களையும் தீர்வுகளையும் உருவாக்க சிங்கப்பூருடனும் அதன் நிறுவனங்களுடனும் பணியாற்ற பிரான்ஸ் விரும்புவதாக பிரான்சின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் ஒலிவியே பெக்ட் கூறினார்.
செப்டம்பர் 21ஆம் தேதி இரு நாடுகளும் பிரான்ஸ்-சிங்கப்பூர் மின்னிலக்க, பசுமை பங்காளித்துவ பணித்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தன. சிங்கப்பூரும் பிரான்சும் வலுவான இருதரப்பு வர்த்தக, முதலீட்டு உறவுகளைக் கொண்டுள்ளன.

