மக்கள் உடல்நலனைக் கவனித்துக்கொள்ள சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்கள் உதவும்

மக்கள் உடல்நலனைக் கவனித்துக்கொள்ள சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்கள் உதவும்

2 mins read
8feefd5a-a0b7-4142-8e76-bb944541b7b8
-

ஒரு­வர் நோய்­வாய்ப்­ப­டுவதைத் தவிர்ப்­ப­தற்கு வகை­செய்­யும் 'ஹெல்­தி­யர் எஸ்ஜி' திட்­டத்தை சிங்­கப்­பூர் அடுத்த ஆண்டு செயல்­ப­டுத்­த­வுள்­ளது.

அந்த வகை­யில் மருத்­து­வ­மனை­கள், பல­துறை மருந்­த­கங்­கள் ஆகி­ய­வற்றை நடத்­து­வ­தை­யும் தாண்டி சிங்­கப்­பூ­ரின் மூன்று சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மங்­கள் பல்­வேறு மருத்­துவ, சமூக நட­வடிக்­கை­க­ளின் மூலம் குடி­யி­ருப்­பா­ளர்­களை ஆரோக்­கி­ய­மாக வைத்­தி­ருப்­ப­தில் கவ­னம் செலுத்தும் என்று சுகா­தார அமைச்சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

தேசிய மருத்­துவ உன்­னத விருது நிகழ்ச்­சி­யில் திரு ஓங் பேசி­னார்.

தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மம், தேசிய பல்­க­லைக்­க­ழக சுகா­தார முறை, சிங்­ஹெல்த் ஆகி­யவை அந்த மூன்று குழு­மங்­கள்.

தற்­போது அவை சமூக நட­வடிக்­கை­களை மேற்­கொள்­கின்றன; ஆனால் அத்­த­கைய நட­வடிக்­கை­கள் அவை மேற்­கொள்­ளும் முயற்­சி­களில் சிறு பங்­கையே வகிக்­கின்­றன.

மக்­கள்­தொ­கை­யின் சுகா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மங்­கள் கூடு­தல் பங்கு வகிக்­கும்­போது சமூக நட­வ­டிக்­கை­கள் கணி­ச­மாக அதி­க­ரிக்­கும்.

'ஹெல்­தி­யர் எஸ்ஜி' திட்­டத்­தின்­கீழ் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு எவ்வாறு உரு­மா­றும் என்­பதை திரு ஓங் விளக்­கி­னார்.

திட்­டத்­திற்­கான வெள்ளை அறிக்கை சென்ற வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

அது குறித்து இவ்­வாண்டு அக்­டோ­பர் மாதம் நாடா­ளு­மன்றத்தில் விவா­திக்­கப்­படும்.

நோய்­வாய்ப்­பட்ட பிறகு ஒரு­வரைக் கவ­னித்­துக்­கொள்­வ­தற்­குப் பதி­லாக அவர் நோய்­வாய்ப்­ப­டு­வதைத் தவிர்ப்­ப­தற்­கான முயற்­சி­களில் கூடு­தல் கவ­னம் செலுத்­து­வது 'ஹெல்­தி­யர் எஸ்ஜி' திட்­டத்­தின் நோக்­கம்.

அதற்கு வழி­வ­குக்க சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மங்­க­ளுக்­கான நிதி வழங்­கும் முறை மாற்­றப்­படும்.

மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­படும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை, மேற்­கொள்­ளப்­படும் அறுவை சிகிச்­சை­கள் உள்­ளிட்ட அம்­சங்­க­ளைக் கருத்­தில்­கொண்டே தற்­போது நிதி வழங்­கப்­ப­டு­கிறது.