இருமொழி கற்றல் வளங்களை அதிகரிக்க புதிய ஒப்பந்தம்

காயத்திரி காந்தி

பாலர் பருவத்திலிருந்து தங்கள் தாய்மொழிகளை விருப்பத்தோடு மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கு ஏதுவான பல ஆர்வமூட்டும் வளங்களை அதிகரிக்கவும் சிறுவர்களுக்கான உள்ளூர் இருமொழிப் புத்தகங்களையும் மற்றும் தாய்மொழி சார்ந்த நூல்களையும் எழுதுபவர்களுக்கு மேலும் ஆதரவு அளிக்கவும், தேசிய நூலக வாரியம், இரு மொழிக் கல்விக்கான லீ குவான் இயூ நிதியுடன் சேர்ந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் தேசிய நூலக வாரியம், ஆங்கிலத்திருந்து சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பத்து புதிய புத்தகங்களின் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது.

பெற்றோர், பிள்ளைகளுக்கு இடையே உள்ள தமிழ் புழக்கத்தை அதிகரிப்பதையும், சிறுவர்களை இருமொழி கற்றல் வழி தாய்மொழியில் பேச ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

"இந்த ஒப்பந்தம் சிறுவர்கள் இடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கிறது. மொழி அறிவு பெருகுவதற்கும் பேசுவதற்கும் அடிப்படையாக விளங்குவது ஒருவரின் வாசிப்பு பழக்கம்தான். உள்ளூர்ச் சூழல்களுக்கு ஏற்ப எழுதப்பட்டிருக்கும் இப்புத்தங்களை வாசிப்பதன் மூலம் சிறுவர்கள் தங்கள் மொழி அறிவை விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

"மின்புத்தகங்களும் வெளியிடப்படுவதால் சிறுவர்களும் அவர்களது பெற்றோரும் வீட்டில் இருந்தவாறே வாசிப்பைத் தொடங்கலாம்," என்று கூறினார் தேசிய நூலக வாரியத்தின் தமிழ் சேவைப் பிரி வின் தலைவர் திரு து. அழகிய பாண்டியன்.

சிங்கப்பூர் எழுத்தாளர்கள் சிறுவர்களுக்கான நூல்களை எழுதுவதற்கு இருமொழிக் கல்விக்கான லீ குவான் இயூ நிதியால் ஊக்குவிக்கப்படுகிறார்கள். நிதி ஆதரவோடு வரும் நூல்களை தேசிய நூலக வாரியம் தங்கள் நூலங்களிலும் செயலியிலும் சேர்த்து அவற்றை எல்லாருக்கும் சென்றடையும் வண்ணம் பிரபலப்படுத்துவார்கள் என்றும் இதன் மூலம் உள்ளூர் எழுத்தாளர்களால் எழுதப்படும் சிறுவர் நூல்கள் இனி வரும் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 27 ஆம் தேதி முதல் தேசிய நூலக வாரியத்தின் செயலி மூலம் இவற்றை மின் புத்தங்களாகவும் படிக்கலாம், இரவலும் பெற்றுக் கொள்ளலாம்.

அதனை தொடர்ந்து, அடுத்த மாதம் 31 ஆம் தேதி முதல் தேசிய நூலக வாரியத்தின் பொது நூலகங்களிலிருந்து இந்தப் புத்தகங்களை நேரடியாக இரவல் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இருமொழிக் கல்விக்கான லீ குவான் இயூ நிதியின் ஆதரவில் அச்சிடப்பட்ட புத்தகங்களை மின்புத்தகங்களாக மாற்ற மானியங்களையும் வழங்கும்.

அதன் மூலம் தயாரிக்கப்படும் இருமொழி புத்தகங்கள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேசிய நூலக வாரியத்தின் திறன்பேசிச் செயலியில் மட்டுமல்லாது நூலகங்களின் கதை சொல்லும் நேரங்களிலும் சேர்க்கப்படும்.

இருமொழிக் கல்விக்கான லீ குவான் இயூ நிதியுடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், புரவலர்களுக்கான பொருத்தமான வளங்களைக் கொண்ட கற்றல் சந்தையை உருவாக்குவதற்கான தேசிய நூலக வாரியத்தின் 'லேப் 25' (நூலகங்கள் மற்றும் ஆவணக் காப்பகங்கள் புளூபிரிண்ட் 2025) தொலைநோக்குப் பார்வையை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும், இந்த ஒப்பந்தம் தாய்மொழிகளில் உள்ள படைப்புகளை எடுத்துக்காட்டி, ஒரு கூட்டு சிங்கப்பூர் அனுபவத்தைக் கண்டறிய உதவுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!