சிங்கப்பூரில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் அதை புதிப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். தற்போது உள்ள செயலியில் இரண்டு பாதுகாப்பு அம்சங்கள் வலுவிழந்து இருப்பதாகவும் அவற்றை பயன்படுத்தி கணினி ஊடுருவிகள் செயலியை ஊடுருவலாம் எனவும் கூறப்பட்டது.
தற்போது செயலிலை பயன்படுத்துவோர் எந்தவொரு பிரச்சினையும் எதிர்நோக்கவிட்டாலும், உடனடியாக செயலியை மேம்படுத்திக்கொள்ளுமாறு சிங்செர்ட் நிறுவனம் கூறியது.
வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி காணொளி அழைப்பு செய்யும்போது செயலி ஊடுருவப்படலாம் அல்லது செயலியை பயன்படுத்துவோருக்கு ஊடுருவிகள் தகாத காணொளிகளை அனுப்பிவைக்கலாம்.
ஆக ஆண்மைய வாட்ஸ்அப் செயலியை பெற்றுகொள்ள உடனடியாக செயலியை மேம்படுத்துமாறு பயனீட்டாளர்கள் கேட்டுகொள்ளப்பட்டனர்.

