குறைந்த சோடியம் உள்ள உப்புக்கு மாறிய 150 சமையல் நிறுவனங்கள்

குறைந்த சோடியம் உள்ள உப்புக்கு மாறிய 150 சமையல் நிறுவனங்கள்

2 mins read
6e13110a-282c-4905-ae6d-f09cb3dde248
குறைந்த சோடியம் உள்ள உப்புக்கு மாறியுள்ள 150 சமையல் நிறுவனங்களில் 'எல்பிஎச் கேட்டரிங்' நிறுவனமும் ஒன்று. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சோடி­யம் உட்­கொள்­ளும் அள­வைக் குறைக்­கு­மாறு சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் வலி­யு­றுத்­த­வுள்ள நிலை­யில், கிட்­டத்­தட்ட 150 சமை­யல் நிறு­வ­னங்­கள் குறைந்த சோடி­யம் கொண்ட உப்­புக்­கும் சுவைச்­சா­றுக்­கும் (sauce) மாறி­விட்­டன.

உட­லுக்கு நலம்­ப­யக்­கும் குறைந்த சோடிய உப்­பைத் தங்களது உண­வு­வ­கை­களில் பயன்­படுத்தும்­படி, உண­வ­கக் குழு­மங்­களு­ட­னும் உண­வுக்­க­டை­களு­ட­னும் சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் இணைந்து பணி­யாற்­றும்.

சிங்­கப்­பூ­ரில் உயர் ரத்த அழுத்­தப் பிரச்­சினை அதி­க­ரித்­து­வ­ரும் நிலை­யில், அதற்­குத் தீர்­வு­கா­ணும் வித­மாக குறைந்த சோடிய உப்பைப் பயன்­ப­டுத்த வாரி­யம் ஊக்கு­விக்­கிறது.

மிகுந்த அள­வில் சோடி­யம் எடுத்­துக்­கொள்­வது உயர் ரத்த அழுத்­தப் பிரச்­சி­னையை ஏற்­படுத்தி, மார­டைப்­புக்­கும் பக்­க­வாதத்­திற்­கும் இட்டுச் செல்­லும் என்று ஆய்­வு­கள் காட்­டு­கின்­றன.

வாரி­யத்­தின் ஆரோக்­கிய உணவுத் திட்­டத்­தின்­கீழ் கடந்த ஆண்­டில் இருந்தே குறைந்த சோடிய உப்­பைப் பயன்­ப­டுத்தி வரு­கிறது 'எல்­பி­எச் கேட்­ட­ரிங் நிறு­வ­னம்.'

இந்த மாற்­றம் முற்­றி­லும் இனி­மை­யான அனு­ப­வ­மாக இருப்­ப­தாக அந்­நி­று­வ­னம் குறிப்­பிட்­டது.

"உண்­மை­யி­லேயே நாங்­கள் சமை­யல் முறைகளில் மாற்­றம் செய்­யத் தேவை ஏற்­ப­ட­வில்லை," என்­றார் அந்­நி­று­வ­னத்­தின் தலைமை மேலா­ளர் ஷோன் லீ. குறைந்த சோடிய உப்­பைச் சேர்ப்­பதால் சுவை­யில் எந்த மாற்­ற­மும் இல்லை என்­றும் அவர் சொன்­னார்.

குறைந்த சோடிய உப்­புக்கு மாறி­ய­பின் தங்­கள் வாடிக்­கை­யாளர்­களும் சுவை­யில் எந்த மாற்­றத்தை உண­ர­வில்லை என்­றும் எதிர்­ம­றை­யான கருத்­து­கள் எது­வும் வர­வில்லை என்­றும் அவர் கூறி­னார்.

கடந்த ஆண்டு தேசிய போக்கு­வரத்து ஊழி­யர் தொழிற்­சங்க உண­வ­கங்­களும் உணவு சேவை­கள் நிறு­வ­ன­மான சோடெக்­சோவும் இடம்­பெற்ற நான்கு வார முன்­னோ­டிச் சோத­னை­யில், வழக்­க­மான உப்­பை­யும் சுவைச்­சா­று­க­ளை­யும் கொண்டு சமைத்த உண­வு­வ­கை­களி­லும் குறைந்த சோடிய மாற்றுப்­பொ­ருள்­க­ளைக் கொண்டு சமைத்த உண­வு­வ­கை­க­ளி­லும் சுவை­யில் எந்த மாற்­றத்­தை­யும் உண­ர­வில்லை என்று 83 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­ததை வாரி­யம் கண்­ட­றிந்­தது.

உணவு சமைப்­ப­தற்­கான செல­வி­லும் மிகச் சிறிய மாற்­றமே இருந்­தது. குறைந்த சோடி­யம் கொண்ட உண­வைச் சமைக்க 0.1 காசே கூடு­த­லா­கச் செல­வானது. அந்த உண­வில் கிட்­டத்­தட்ட 450 மில்­லி­கி­ராம் சோடி­யம் குறை­வாக இருந்­தது.

வழக்­க­மான உப்­பை­விட கிட்­டத்­தட்ட 30% குறை­வாக சோடி­யம் இருக்­கும் பொட்­டா­சி­யம் குளோ­ரைடு, பெரும்­பா­லும் குறைந்த சோடிய மாற்­றுப்­பொருளாகப் பயன்­படுத்­தப்­ப­டு­கிறது.

ஏறத்­தாழ 12 ஆண்­டு­க­ளுக்­கு­முன் தமக்கு உயர் ரத்த அழுத்­தம் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து, தமது சொந்த சமை­ய­ல­றை­யில் குறைந்த சோடிய உப்­பை­யும் சுவைச்­சா­று­க­ளை­யும் பயன்­படுத்­து­வ­தா­கக் கூறி­னார் திரு சம்­சு­தீன் சமன், 55.

கடந்த 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேலா­கக் குறைந்த சோடிய உப்பை விற்று வரு­கிறது 'ஐஎம்ஐ லைஃப்ஸ்டைல் புரா­டக்ட்ஸ்' நிறு­வனம். இந்­நி­லை­யில், குறைந்த சோடி­யம் உள்ள உப்­பைப் பயன்­படுத்­தும்­படி ஊக்­கு­விக்­கப்­ப­டு­வதால் அத்­த­கைய பொருள்­களுக்கு அதிக தேவை ஏற்­படும் என்று அதன் நிர்­வாக இயக்­கு­நர் கோ சியூ செங் நம்­பிக்கை தெரி­வித்­தார்.