வாட்ஸ்அப் செயலியைப் புதுப்பிக்க வலியுறுத்து

வாட்ஸ்அப் செயலியைப் புதுப்பிக்க வலியுறுத்து

1 mins read
e3d3e10b-e723-450f-8525-458ef22d818a
-

வாட்ஸ்­அப் செய­லி­யில் இரு பாது­காப்­புக் குறை­பா­டு­க­ளைச் சரி­செய்ய அச்­செ­ய­லி­யின் ஆக அண்­மைய வடி­வத்­தைப் பதி­விறக்கம் செய்­து­கொள்ள சிங்­கப்­பூ­ரில் உள்ள வாட்ஸ்­அப் பய­னா­ளர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டு உள்­ள­னர். இந்­தக் குறை­பா­டு­களால் ஊடு­ரு­வி­கள் இச்­செ­ய­லி­யைத் தங்­கள் கட்­டுப்­பாட்­டிற்­குள் கொண்­டு­வர முடி­யும்.

இது­கு­றித்து சிங்­கப்­பூர் கணினி அவ­சர பதில் நட­வ­டிக்­கைக் குழு நேற்று வெளி­யிட்ட தக­வ­லில் இதைத் தெரி­வித்­தது. பய­னா­ளர்­கள் வாட்ஸ்­அப் செய­லி­யின் ஆக அண்­மைய வடி­வத்தை உட­ன­டி­யாக பதி­வி­றக்­கம் செய்­து­கொள்ள வேண்­டும் என்று அது கூறி­யது.

முத­லா­வது பாது­காப்­புக் குறை­பாடு, பய­னா­ளர் காணொளி அழைப்பை மேற்­கொள்­ளும்­போது ஊடு­ரு­வி­கள் இச்­செ­ய­லியை தங்­கள் கட்­டுப்­பாட்­டிற்­குள் கொண்டு­வர முடி­யும்.

இரண்­டா­வது பாது­காப்­புக் குறை­பாடு, வாட்ஸ்­அப்­பின் காணொ­ளிக் கோப்­பைக் கையாளும் அங்­கத்­தைப் பாதிக்­கிறது. குறிப்­பிட்ட ஒரு பய­னா­ள­ரி­டம் காணொ­ளிக் கோப்­பு­களை ஊடு­ரு­வி­கள் அனுப்பி, பய­னாளர்­கள் அவற்­றைக் காண வைப்­பர்.