வெப்பமான பகல், குளிரான இரவு என மாறும் சிங்கப்பூர் வானிலை

பரு­வ­நிலை மாற்­றத்­தின் விளை­வாக சிங்­கப்­பூ­ரில் விரை­வில் பகல்­பொ­ழு­து­களில் அதிக வெப்­ப­மும் இர­வு­வே­ளை­க­ளில் அதி­கக் குளி­ரும் உண­ரப்­ப­டக்­கூ­டும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

கடு­மை­யான வானிலை நிகழ்­வு­கள் அடிக்­கடி ஏற்­ப­டு­வ­தால் இவ்­வாறு நேரக்­கூ­டும் என்று கரு­தப்­படு­கிறது.

இதனை முன்­னிட்டு சிங்­கப்­பூர் ஆய்வு, மேம்­பாட்­டுப் பணி­க­ளுக்­கும் வானிலை முன்­னு­ரைப்­புத் திறனை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கும் அதி­க­மாக முத­லீடு செய்­து­வ­ரு­வ­தாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் கூறி­யுள்­ளது.

பரு­வ­நிலை மாற்­றத்­தின் நீண்­ட­கா­லத் தாக்­கத்­தைச் சமா­ளிக்க இது கைகொ­டுக்­கும். வாரி­யம் சென்ற நிதி­யாண்­டுக்­கான அதன் ஒருங்­கி­ணைந்த நீடித்த நிலைத்­தன்மை அறிக்­கையை நேற்று வெளி­யிட்­டது.

அதில், இந்த ஆண்­டின் முதல் ஏழு மாதங்­களில் ஆக அதிக வெப்­ப­நி­லை­யாக ஏப்­ரல் 1ஆம் தேதி, அட்­மி­ரல்­டி­யில் 36.8 டிகிரி செல்­சி­யஸ் பதி­வா­ன­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்­னர் 1983ஆம் ஆண்டு ஏப்­ரல் 17ஆம் தேத் டெங்­கா­வில் 37 டிகிரி செல்­சி­யஸ் வெப்­ப­நிலை பதி­வா­னது.

இந்த ஆண்­டில் இது­வரை, பிப்­ர­வரி 20ஆம் தேதி இரவு வெப்ப நிலை 20.5 டிகிரி செல்­சி­ய­ஸா­கப் பதி­வா­னது. இதற்கு முன்­னர் 1934ஆம் ஆண்டு ஜன­வரி 30, 31 ஆகிய தேதி­களில், ஆகக் குறை­வான வெப்­ப­நி­லை­யாக 19.4 டிகிரி செல்­சி­யஸ் பதி­வா­னது.

ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின், பரு­வ­நிலை மாற்­றம் தொடர்­பான அர­சாங்­க­நி­லைக் குழு, கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைக்கா­விட்­டால், 2050ல் சிங்­கப்­பூ­ரில் மிகக் கடு­மை­யான வெப்ப அலை­களும், பெரு­வெள்­ள­மும் ஏற்­படும் என்று சென்ற ஆண்டு அறிக்­கை­யில் எச்­ச­ரித்­தி­ருந்­தது.

2100ஆம் ஆண்டு வரை­யி­லான வானிலை முன்­னு­ரைப்­பு­கள் தொடர்­பான ஆய்­வில் தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் ஈடு­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!