மின்னிலக்கப் போட்டித்தன்மையில் ஆசியாவில் முதலிடம்

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் ஆசியாவில் முதலிடம்

1 mins read
98f43fd6-5ffc-4f98-a35b-592d7866f22b
-

உலக மின்­னி­லக்­கப் போட்­டித்­தன்­மைத் தர­வ­ரி­சை­யில் சிங்­கப்­பூர் நான்­காம் இடத்­தை­யும் ஆசிய அள­வில் முத­லி­டத்­தை­யும் பிடித்­துள்­ளது.

டென்­மார்க், அமெ­ரிக்கா, சுவீ­டன் ஆகியவை முறையே முதல் மூன்று இடங்­களில் உள்­ளன.

உயர்­கல்­வி­யில் மேம்­பாடு, ஆய்வு, உரு­வாக்­கத்­தில் பணி­யாற்­றும் ஊழி­யர் விகி­தத்­தில் அதி­க­ரிப்பு, வெளி­நாட்­டுத் திற­னா­ளர்­கள் ஈர்ப்­பி­லும் அறி­வி­யல் ஆராய்ச்­சி­யி­லும் உகந்த வகை­யில் ஒழுங்­கு­முறை மேம்­பா­டு­கள் போன்ற கார­ணங்­க­ளால் உல­கத் தர­வ­ரி­சை­யில் சிங்­கப்­பூர் ஓரி­டம் முன்­னே­றி­யுள்­ளது என்று உல­கப் போட்­டித்­தன்மை மையம் தெரி­வித்­துள்­ளது.

ஆண்­டு­தோ­றும் வெளி­யி­டப்­படும் இப்­பட்­டி­ய­லில் மொத்­தம் 63 நாடு­கள் இடம்­பெற்­றுள்­ளன.

அர­சாங்க நடை­மு­றை­க­ளி­லும் தொழில் மாதி­ரி­க­ளி­லும் சமு­தா­யத்­தி­லும் புதிய மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பங்­க­ளைப் பின்­பற்­று­வ­தின் அடிப்­ப­டை­யில் அவை மதிப்­பி­டப்­ப­டு­கின்­றன.

'தொழில்­நுட்­பத்­தில்' சிங்­கப்­பூர் முத­லி­டம் பிடித்­தது. ஒழுங்­கு­முறைக் கட்­ட­மைப்­பில் அது தனது முத­லி­டத்­தைத் தக்­க­வைத்­துக்­கொண்­டது. ஆயி­னும், 'எதிர்­காலத்திற்­கான ஆயத்­த­நிலை'யில் சிங்கப்பூர் பத்­தாம் இடத்­தையே பிடித்­தது.

நான்கு இடங்­கள் முன்­னேறி பட்­டி­ய­லில் எட்­டாம் இடத்­திற்கு உயர்ந்த தென்­கொ­ரியா, ஆசிய அள­வில் இரண்­டா­வ­தாக வந்­தது.

ஹாங்­காங் பெரும் சரி­வைச் சந்­தித்து, இரண்­டா­மி­டத்­தில் இருந்து ஒன்­ப­தாம் இடத்­திற்கு இறங்­கி­யது.

அவ்­வட்­டா­ரம் ஆய்வு, உரு­வாக்­கச் செல­வி­னத்­தில் 41ஆம் இடத்­தை­யும் ஆய்வு, உரு­வாக்க உற்­பத்­தித்­தி­ற­னில் 24ஆம் இடத்­தை­யும் பிடித்­தது.

இணை­யப் பாது­காப்­பைப் பொறுத்­த­மட்­டில், அதி­ந­வீன இணை­யத் தாக்­கு­தல்­களை எதிர்­கொள்­வதற்கு முழு­மை­யாக ஆயத்­த­மா­வதில் இன்­னும் வெகு­தொ­லைவு செல்ல வேண்­டி­யுள்­ளது என்று உல­கப் போட்­டித்­தன்மை மையம் தெரி­வித்துள்­ளது.

அந்த அம்­சத்­தில் கிழக்­கா­சிய நாடு­கள் முன்­னி­லை­யில் இருப்­ப­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.