பாட்டாளிக் கட்சியின் ஏற்பாட்டில் இளையர்க்கான போட்டி

பாட்டாளிக் கட்சியின் ஏற்பாட்டில் இளையர்க்கான போட்டி

1 mins read
da7ec9fb-2a60-4b47-bcbd-1b8a2389862a
-

பாட்­டா­ளிக் கட்­சி­யின் இளை­யர் பிரி­வும் கட்­சி­யின் கொள்கை ஆய்­வுக் குழு­வும் இணைந்து, கொள்கை மாற்­றம் தொடர்­பான யோச­னை­களைச் சமர்ப்­பிக்க வகை­செய்­யும் போட்­டிக்கு ஏற்­பாடு செய்­துள்­ளன.

பாட்­டா­ளிக் கட்சி கொள்­கைச் சவால் 2022 என்­பது அதன் பெயர்.

போட்­டி­யா­ளர்­கள் கொடுக்­கப்­படும் நான்கு தலைப்­பு­களில் ஒன்­றைத் தேர்ந்­தெ­டுத்­துக் கொள்­ள­லாம்.

இளை­யர்­கள் தங்­கள் பரிந்­துரை­க­ளைச் சமர்ப்­பிக்­க­வும் பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் கலந்­தா­லோ­சித்து அவற்­றுக்கு மெரு­கூட்டி, அது­குறித்த விவா­தங்­களில் கலந்­து­கொள்ளவும் இப்­போட்டி வகை­செய்­யும். 40 வய­தும் அதற்­குக் கீழான வய­து­மு­டைய சிங்­கப்­பூ­ரர்­கள் இதில் கலந்­து­கொள்­ள­லாம்.

அடுத்த மாதம் 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை இளை­யர்­கள் தங்­கள் பரிந்­து­ரை­க­ளைச் சமர்ப்­பிக்­க­லாம் என்று ஏற்­பாட்­டா­ளர்­கள் கூறி­னர்.