நீடித்து நிலைக்கவல்ல வேலைச் சூழலுக்கு வலியுறுத்து

நீடித்து நிலைக்கவல்ல வேலைச் சூழலுக்கு வலியுறுத்து

1 mins read
45a138ab-03d7-41cd-9f67-201f1e73d940
-

பரு­வ­நிலை மாற்­றம் ஏற்­ப­டுத்­தி­யுள்ள எதிர்­ம­றைத் தாக்­கங்­களை மாற்­று­வ­தற்கு வளங்­க­ளின் நிலை­யான பயன்­பாடு முக்­கி­யம் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் ரவி மேனன் வலியுறுத்தியுள்­ளார்.

தேவைக்­கும் வழங்­க­லுக்­கும் இடை­யி­லான சம­னின்­மை­யால் பல ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்­குப் பண­வீக்­கம் உயர்ந்­து­விட்­டது. அத்­த­கைய சம­னின்­மை­யைத் தவிர்க்க, நிலைத்த பொரு­ளி­யல் வளர்ச்­சியை எட்­டு­வ­தி­லும் நீடித்து நிலைக்­க­வல்ல வேலைச் சூழலை ஊக்­கு­விப்­ப­தி­லும் கொள்கை வகுப்­பா­ளர்­கள் மிகுந்த கவ­னம் செலுத்த வேண்­டும் என்று திரு மேனன் கேட்­டுக்­கொண்­டார்.

நாணய ஆணை­ய­மும் சான் ஃபிரான்­சிஸ்கோ ஃபெடரல் ரிசர்வ் வங்­கி­யும் இணைந்து நேற்று ஏற்­பாடு செய்­தி­ருந்த மெய்­நி­கர் ஆசிய வங்­கி­யி­யல், நிதிக் கருத்­த­ரங்­கில் உரையாற்றிய­போது அவர் இவ்­வாறு சொன்­னார். சான் ஃபிரான்­சிஸ்கோ ஃபெடரல் ரிசர்வ் வங்­கி­யின் தலை­வர் மேரி டாலி­யும் திரு மேன­னின் கருத்தை ஒப்­புக்­கொண்­டார்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டதை அடுத்து, பய­னீட்­டா­ளர் தேவை மீட்சி பெற்று, கடந்த ஓராண்­டாக பண­வீக்­கம் உயர்ந்­துள்­ள­தாக திரு­வாட்டி மேரி குறிப்­பிட்­டார்.

கடந்த 2008ஆம் ஆண்­டிற்­குப் பிறகு சிங்­கப்­பூ­ரில் பண­வீக்­கம் ஆக உச்­சத்தை எட்­டி­யுள்­ளது.

அது­போல, கடந்த நாற்­ப­தாண்­டு­களில் இல்­லாத அள­விற்கு அமெ­ரிக்­கா­வில் பொருள்­க­ளின் விலை­கள் உயர்ந்து வரு­கின்­றன.