தரநிலையைக் கடைப்பிடித்ததால் 70% சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு உலகளாவிய வாய்ப்புகள்

தரநிலையைக் கடைப்பிடித்ததால் 70% சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு உலகளாவிய வாய்ப்புகள்

1 mins read
38952e7f-6b28-4ddc-84a9-9cc54581ec16
-

தர­நி­லைச் சான்­றி­த­ழுக்­கான நடை­மு­றை­க­ளைக் கடைப்­பி­டித்­த­தால், சிங்­கப்­பூ­ரின் 70 விழுக்­காட்டு சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் பல­ன­டைந்­துள்­ளன.

அவை, ஏற்­று­மதி, அனைத்­துலக வர்த்­த­கம் ஆகி­ய­வற்­றுக்­கான வாய்ப்­பு­க­ளைப் பெற முடிந்­த­தாக எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் நிறு­வனத்­தின் ஆய்­வில் தெரி­ய­வந்­தது. கடந்த மார்ச் மாதம் இடம்­பெற்ற ஆய்­வில் 1,000க்கும் மேலான நிறு­வனங்­கள் பங்­கெ­டுத்­தன.

தர­நிலை நடை­மு­றை­க­ளைக் கடைப்­பி­டித்த 90 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள், போட்­டி­யா­ளர்­களு­டன் ஒப்­பி­ட்டால் தங்­கள் பொருள்­களி­லும் சேவை­க­ளி­லும் குறிப்­பி­டத்­தக்க வித்­தி­யா­சம் இருப்­ப­தைக் காண­மு­டி­வ­தா­கக் கூறின.