வேலையிடப் பாதுகாப்பு மேம்பட உதவி; விருது

1 mins read
f83a5e21-2857-4723-a345-f4b23df86156
கோப்தோர்ன் கிங்ஸ் ஹோட்டல் சிங்கப்பூரில் பாதுகாவல் நிர்வாகியாக பணியாற்றும் திரு தமிழரசன் செல்லக்கண்ணு தனிநபர் விருது பெற்றார். படம்: சிங்கப்பூர் காவல்துறை -

தேசியப் பாது­காப்பு, பாது­கா­வல் கண்­கா­ணிப்­புக் குழு­மத்­தின் விருது வழங்­கும் நிகழ்ச்சி நேற்று ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் நடந்­தது.

சிங்­கப்­பூர் காவல்­துறை, சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை ஆகி­ய­வற்­று­டன் சேர்ந்து செயல்­பட்டு வேலை­யி­டங்­களில் பாது­காப்பை­யும் பாது­கா­வ­லை­யும் மேம்­படுத்­து­வ­தில் இந்­தக் குழு­மத்­தின் உறுப்­பி­னர்­கள் ஆற்­றும் தொண்­டு­களை அங்­கீ­க­ரித்து, சிறப்பித்து, பாராட்டும் வகை­யில் இந்த விருது வழங்­கப்­ப­டு­கிறது.

உள்­துறை துணை அமைச்­சர் திரு­வாட்டி சுன் ஷுவெ­லிங் நேற்று விரு­து­களை வழங்­கி­னார்.

மொத்­தம் 57 பாது­காப்பு, பாது­கா­வல் கண்­கா­ணிப்­புக் குழும உறுப்­பி­னர்­கள், தனிச்­சி­றப்­பு­மிக்க குழு­மம் மற்­றும் தனி­ந­பர் விரு­தைப் பெற்­ற­னர். இதர 80 உறுப்­பி­னர்­கள் குழுமம், தனி­ந­பர், பாராட்டு விருது­களைப் பெற்­றுக்­கொண்­ட­னர்.

இந்த ஆண்டு நிகழ்ச்­சி­யில் 18 நிறு­வ­னங்­க­ளுக்கு மிரட்­டல் பரி­சோ­தனை ஒருங்­கி­ணைந்த ஏற் பாட்டு முறை விருது வழங்­கி சிறப்பிக்கப்பட்டது.

எட்டு நிறு­வ­னங்­கள் சிறப்­புப் பாராட்டு, தனிச்­சி­றப்பு விரு­தை­யும் இதர 10 நிறு­வ­னங்­கள் உயர் பாராட்டு மற்­றும் பாராட்டு விருதை­யும் பெற்­றன.

இந்த விவ­ரங்­களை சிங்­கப்­பூர் காவல்­து­றை­யும் சிங்­கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படை­யும் கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன.