தடை செய்யப்பட்ட எண்ணிலிருந்து வரும் அழைப்பைத் தடுக்கும் செயலி; ஆண்ட்ராய்டு திறன்பேசிக்காரர்களுக்கு உதவும்

தடை செய்யப்பட்ட எண்ணிலிருந்து வரும் அழைப்பைத் தடுக்கும் செயலி; ஆண்ட்ராய்டு திறன்பேசிக்காரர்களுக்கு உதவும்

2 mins read
1ccc55c7-0872-4374-8006-4253010c86d9
-

ஆண்ட்­ராய்டு கைய­டக்­கச் சாத­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வோர் இப்­போது ஒரு செய­லி­யைப் பதி­விறக்கம் செய்து கொள்­ள­லாம்.

மோசடி தொடர்­பா­னவை என்­பதால் தடுக்­கப்­பட்டு இருக்­கும் எண்­களில் இருந்து அழைப்பு வரும் போது அத்­த­கைய அழைப்­பு­களை அந்­தச் செயலி தடுத்­து­வி­டும்.

கூகல் பிளேஸ்­டோ­ரில் இருந்து கைப்பே­சி­களில் ஸ்கேம்­ஷீல்டு (ScamShield) என்ற அந்­தச் செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்­து­கொள்­ள­லாம்.

அந்­தச் செயலி 2020 நவம்­பர் முதல் ஆப்­பிள் நிறு­வன கைப்­பேசி­களில் பய­னில் இருந்து வரு­கிறது.

மூத்த அமைச்­ச­ரும் தேசிய பாது­காப்பு ஒருங்­கி­ணைப்பு அமைச்­சரு­மான டியோ சீ ஹியன், உள்­துறை துணை அமைச்­சர் சுன் ஷுவெ­லிங் ஆகிய இரு­வ­ரும் அந்­தச் செயலியை நேற்று அதி­கா­ர­பூர்­வ­மாக வெளி­யிட்­ட­னர்.

தேசிய குற்­றச்­செ­யல் தடுப்பு மன்­றத்­தின் 40வது ஆண்­டு­விழாவைக் குறிக்­கும் வகை­யில் நேற்று நடந்த விருந்­தில் கலந்­து­கொண்டு செய­லியை அவர்­கள் வெளி­யிட்­ட­னர்.

அந்­தச் செயலி கண்­டு­பி­டிக்­கும் மோச­டி­யான குறுஞ்­செய்­தி­கள் தேசிய குற்­றச்­செ­யல் தடுப்பு மன்­றத்­திற்­கும் காவல்­து­றைக்­கும் உட­னடி­யாக அனுப்பி வைக்­கப்­படும்.

மோசடி அழைப்­பு­கள், மோசடிக் குறுஞ்­செய்­தி­களில் சிக்­கா­மல் பொது­மக்­கள் தப்­பிக்க சிறந்த முறை­யில் புதிய செயலி உத­வும் என்று காவல்­துறை தெரி­வித்­தது.

தேசிய குற்­றச்­செ­யல் தடுப்பு மன்­ற­மும் அர­சாங்க தொழில்­நுட்ப முக­வை­யின் ஒரு பிரி­வான 'ஓப்­பன் கவர்­மெண்ட் புரா­டக்ட்ஸ்' என்ற அமைப்­பும் சேர்ந்து அந்­தச் செய­லியை உரு­வாக்கி உள்ளன.

மன்­ற­மும் காவல்­து­றை­யும் நிர்­வகிக்­கும் ஒரு தக­வல் தளத்­தில் இருந்து வரும் அழைப்­பு­க­ளைத் செயலி தடுத்­து­வி­டும்.

இத­னி­டையே, புதிய செயலி தொடக்க நிகழ்ச்­சி­யில் பேசிய மன்­றத்­தின் தலை­வர் ஜெரால்டு சிங்­கம், இப்போது வெளிவந்துள்ள செயலி, கூகல் பிளேஸ்­டோ­ரில் செப்­டம்­பர் 1ஆம் தேதி சாதா­ரண முறை­யில் வெளி­யி­டப்­பட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.

செப்­டம்­பர் 14ஆம் தேதி நில­வரப்­படி ஸ்கேம்­ஷீல்டு ஆப்­பிள் செய­லியை 315,000க்கும் மேற்­பட்ட பய­னீட்­டா­ளர்­கள் பதி­வி­றக்­கம் செய்து இருக்­கி­றார்­கள்.

அந்­தச் செய­லி, இது­வ­ரை­யில் 5.8 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட குறுஞ்­செய்­தி­கள் பற்றி புகார் தெரி­வித்து இருக்­கிறது; 29,000க்கும் மேற்­பட்ட தொலை­பேசி எண்­க­ளைத் தடுத்து இருக்­கிறது. அந்த எண்­கள் மோசடிக் காரி­யங்­க­ளுக்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்டு இருக்­க­லாம் என்று நம்­பப்­ப­டு­கிறது.