சமூக ஊடகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சிங்கப்பூர் திட்டமிடுகிறது

சமூக ஊடகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சிங்கப்பூர் திட்டமிடுகிறது

1 mins read
6e954bc1-0f6f-427c-bc92-40d03730e131
படம்: பிக்சபே -
Google News Preferred Icon

இணைய சமூக ஊடகங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளை நடப்புக்குக் கொண்டுவர சிங்கப்பூர் திட்டமிடுகிறது.

ஆபத்தை விளைவிக்கும் உள்ளடக்கம் உள்ளூரில் பெறுவதை முடிந்தவரை குறைப்பது அதன் நோக்கம்.

குறிப்பிட்ட உள்ளடக்கத்தைத் தடுப்பது, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் புகார் அளிப்பதை எளிதாக்கும் முறைகள் போன்றவை நடைமுறைப்படுத்தப்படும்.

இணையப் பாதுகாப்புக்கான நடைமுறைக் கோட்பாடுகள், சமூக ஊடகச் சேவைகளுக்கான உள்ளடக்கக் கோட்பாடுகள் ஆகியவற்றின்கீழ், இந்த நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

தொடர்பு, தகவல் அமைச்சு ஒரு மாதத்துக்கு பொதுமக்களுடன் இது குறித்து ஆலோசனைகளை நடத்தியது.

பெற்றோர், இளையர், உயர்கல்வியாளர்கள், சமூகத்தினர், தொழில்துறை குழுவினர் என 600க்கும் அதிகமானவர்கள் ஆலோசனைகளில் கலந்துகொண்டனர்.

கோட்பாடுகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பின்னர், 2023ஆம் ஆண்டிலேயே நடப்புக்கு வரக்கூடும்.

தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ வியாழக்கிழமை (செப்டம்பர் 29) அன்று இதை ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

வன்முறை, பாலியல், சுய-தீங்கு, இணைய அச்சுறுத்தல் உள்ளிட்ட ஆறு அம்சங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆலோசனைகளில் கலந்துகொண்ட பொதுமக்கள் கூறியதாக பொதுமக்கள் தொடர்பு, தகவல் அமைச்சு குறிப்பிட்டது.