ஆறு மாதம் முதல் நான்கு வயது சிறாருக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்த அனுமதி

ஆறு மாதம் முதல் நான்கு வயது சிறாருக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்த அனுமதி

1 mins read
fdd9593d-34cf-43da-b115-c59529064be9
படம்: ராய்ட்டர்ஸ் -

ஃபைசர் நிறுவனத்தின் கொமிர்னாட்டி கொவிட்-19 தடுப்பூசியை ஆறு மாதம் முதல் நான்கு வயது வரையிலான பிள்ளைகளுக்குச் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அறிவியல் ஆணையம் வியாழக்கிழமை (செப்டம்பர் 29) அன்று அதைத் தெரிவித்தது.

மருத்துவத் தரவுகளை கவனமாகப் பரிசீலித்ததாகவும் இந்த வயதுப் பிரிவு பிள்ளைகளுக்கு ஃபைசரின் கொமிர்னாட்டி கொவிட்-19 தடுப்பூசியைச் செலுத்தினால் ஆபத்துகளைவிட பலன்களே அதிகம் என்று ஆணையம் கூறியது.

இந்த வயதுப்பிரிவில் உள்ள சிறார்களுக்கு மூன்று தவணைகளில் தடுப்பூசி செலுத்தப்படும். ஒவ்வொரு முறையும் 3 மைக்ரோகிராம் அளவிலான தடுப்புமருந்து அளிக்கப்படும்.

முதல் தடுப்பூசி செலுத்தப்பட்ட மூன்று வாரங்களில் இரண்டாவது தடுப்பூசி போடப்படும்.

குறைந்தது எட்டு வாரங்கள் இடைவெளிக்குப் பின்னர் மூன்றாவது தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று ஆணையம் தெரிவித்தது.

தடுப்பூசியின் பயன்பாடு குறித்து கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான நிபுணர் குழுவும் சுகாதார அமைச்சும் உரிய நேரத்தில் முடிவெடுக்கும் என்று ஆணையம் சொன்னது.

ஆறு மாதங்கள் முதல் நான்கு வயது வரையிலான சிறாருக்கு ஏற்கெனவே மொடர்னாவின் ஸ்பைக்வேக்ஸ் தடுப்பூசி அனுமதிக்கப்பட்டுள்ளது.