தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

200 கிலோகிராம் இறைச்சியை சிங்கப்பூருக்குள் கடத்த முயன்றவர்

1 mins read
b3f9a957-4d32-4f39-aee6-74cdb838cfe5
எட்டுப் பெட்டிகளில் இருந்த 226 கிலோகிராம் இறைச்சி. படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு -

தமது பயணப் பெட்டியில் 200 கிலோகிராமுக்கு மேல் உறைந்த இறைச்சியை சிங்கப்பூருக்குள் எடுத்து வந்த ஆடவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இறைச்சி வகைகளை சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவந்ததற்காக சீனாவைச் சேர்ந்த 68 வயது ஆடவருக்கு $17,500 அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூர் உணவு அமைப்பும் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் வியாழக்கிழமை (செப் 29) அன்று இதைத் தெரிவித்தன.

சாங்கி விமான நிலையத்தில் வாங் லியான்ஷெங் எனும் அந்த ஆடவர் கடந்த ஜூன் 8ஆம் தேதி இறைச்சி வகைகளைக் கொண்டு வந்தார்.

226 கிலோகிராம் எடையுள்ள இறைச்சிவகைகளை எட்டுப் பெட்டிகளில் வாங் வைத்திருந்தார்.

கோழி, ஆடு ட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, முயல் இறைச்சி உள்ளிட்ட வகைகள் கொண்டுவரப்பட்டன.

சட்டவிரோதமான இறைச்சியை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.