'போதைப்பொருள் இழைக்கும் தீங்கிற்கான எடுத்துக்காட்டு'

'போதைப்பொருள் இழைக்கும் தீங்கிற்கான எடுத்துக்காட்டு'

2 mins read
79a5abc2-ea5d-4dff-ac4a-255d0db1fb4e
-

அண்­மை­யில் அமெ­ரிக்­கா­வின் சான் ஃபிரான்­சிஸ்கோ நக­ரி­

லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­து­கொண்­டி­ருந்த சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னத்­தில் 37 வயது ஆட­வர் ஒரு­வர் வெடி­குண்டு

மிரட்­டல் விடுத்­தார்.

இத­னால் சாங்கி விமான நிலை­யத்­தில் தரை­யி­றங்­கி­ய­தும் அந்த விமா­னத்­தில் சோதனை நடத்­தப்­பட்டது. விமா­னத்­தில் வெடி­குண்டு ஏதும் இல்லை என்று உறுதி செய்­யப்­பட்­டது.

இதை­ய­டுத்து, அந்த ஆட­வர் கைது செய்­யப்­பட்­டார். அவர் போதைப்­பொ­ருள் உட்­கொண்­டி­ருக்­கக்­கூ­டும் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், போதைப்­பொ­ரு­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­து­க­ளுக்­கும் தீங்­கு­க­ளுக்­கும் அந்த ஆட­

வ­ரின் செயல் ஓர் எடுத்­துக்­காட்டு என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

"போதைப்­பொ­ருள், அவற்றை உட்­கொள்­ப­வர்­க­ளுக்கு மட்­டும் தீங்கு விளை­விப்­ப­தில்லை. போதைப் பித்­தர்­க­ளைச் சுற்றி இருப்­ப­வர்­களும் பாதிக்­கப்­ப­டு­வர்," என்று சிங்­கப்­பூர் போதைப்­பொ­ருள் தடுப்­புச் சங்­கம் நேற்று நடத்­திய மாநாட்­டில் அமைச்­சர் சண்­மு­கம் தெரி­வித்­தார்.

2019ஆம் ஆண்­டில் எல்­எஸ்டி வகை போதைப்­பொ­ருளை உட்­கொண்டு தமது தாயார் மற்­றும் பாட்­டி­யின் மர­ணத்­துக்­குக் கார­ண­மாக இருந்த 25 வயது ஆட­வ­ரை­யும் அவர் உதா­ர­ணம் காட்­டி­னார்.

அந்த ஆட­வரை கால­வ­ரை­யறை­இன்றி தடுத்து வைத்­தி­ருக்­கும்­படி இம்­மா­தம் 23ஆம் தேதி­யன்று உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

"போதைப் புழங்­கி­யின் செயல் கார­ண­மாக உயி­ரி­ழந்த அந்­தப் பாட்­டிக்­கும் தாயா­ருக்­கும் அஞ்­சலி செலுத்­தும் வகை­யி­லும் குரல் கொடுக்­கும் வகை­யி­லும் எந்த ஒரு சமூக ஆர்­வ­ல­ரும் செயல்­ப­ட­வில்லை. அந்த இருவரின் உயி­ரும் முக்­கி­யம்," என்று திரு சண்­மு­கம் கூறி­னார்.

போதைப்­பொ­ருள் பயன்­பாடு சட்­ட­வி­ரோ­த­மா­ன­தல்ல என்று

அண்­மைய ஆண்­டு­களில் சில நாடு­கள் அவற்­றின் சட்­டங்­களில் மாற்­றம் செய்­துள்­ளன.

உதா­ர­ணத்­துக்கு, கஞ்சா செடி பயி­ரி­டு­வ­தை­யும் கஞ்சா உட்­கொள்­வ­தை­யும் கடந்த ஜூன் மாதத்­தி­லி­ருந்து தாய்­லாந்து அனு

­ம­திக்­கிறது. இதை­ய­டுத்து, கஞ்சா உட்­கொள்­வ­தால் அங்­குள்ள

பதின்­ம­வ­ய­தி­ன­ருக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­கள் பற்றி செய்­தி­கள் வெளி­யாகி உள்­ளன.

கஞ்சா கலந்த பிஸ்­கட் ஒன்­றைச் சாப்­பிட்ட மூன்று வயது குழந்­தையை உட­ன­டி­யாக மருத்­து­வ­

ம­னைக்­குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்­கும் நிலை ஏற்­பட்­டதை திரு சண்­மு­கம் சுட்­டி­னார்.

இதை­ய­டுத்து, பள்­ளி­களில் கஞ்சா பயன்­ப­டுத்­து­வது, சிறு­வர்­

க­ளி­டம் கஞ்சா விற்­பது, கர்ப்­

பி­ணி­க­ளி­ட­மும் தாய்ப்­பால் ஊட்­டும் பெண்­க­ளி­ட­மும் கஞ்சா விற்­பது ஆகி­ய­வற்­றுக்­குத் தாய்­லாந்து அதி­கா­ரி­கள் தடை விதித்­துள்­ள­னர்.

போதைப்­பொ­ருள் தொடர்­பாக சிங்­கப்­பூ­ரின் கொள்­கை­கள் அறி­வி­யல், ஆதா­ரங்­கள், பகுத்­த­றிவு அடிப்­ப­டை­யி­லா­னவை என்று

அமைச்­சர் சண்­மு­கம் கூறி­னார்.

கஞ்சா உட்­கொள்­வ­தால் குணப்­ப­டுத்த முடி­யாத மூளைச் சிதைவு, மூளைச் சுருக்­கம், மிகக் கடு­மை­யான மன­நோய் போன்­றவை ஏற்­ப­டு­வதை உல­க­ளா­விய ஆய்­வு­கள் தெரி­விப்­ப­தாக 2015ஆம் ஆண்­டில் மன­ந­லக் கழ­கம் நடத்­திய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ள­தாக அமைச்­சர் சண்­மு­கம் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் மருத்­து­வரின் பரிந்துரையின்கீழ் மருத்துவப் பயன்­பாட்­டுக்­காக நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்டு கஞ்சா போன்ற போதைப்பொருள் பயன்­பாட்­டுக்கு ஒப்­பு­தல் அளிக்கலாம் என்­றார் அவர்.