சுவா சூ காங் வட்டாரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் 28 வயது உணவு விநியோக ஊழியர் ஒருவர் மாண்டார். அவர் ஓட்டிச் சென்ற மின் சைக்கிள் மீது கார் மோதியது. இந்த விபத்து புளோக் 130 சுவா சூ காங் அவென்யூ 1ல் நிகழ்ந்தது.
கவனமின்றி வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததற்காகவும் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காகவும் பெண் ஒருவரும் இரண்டு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இரவு 11.25 மணி அளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. விபத்துக்குள்ளான ஆடவரை இங் டெங் ஃபோங் மருத்துவ
மனைக்குக் கொண்டு சென்றபோது அவர் சுயநினைவின்றி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்து குறித்து காவல்
துறையினர் விசாரணை நடத்து கின்றனர். அந்த உணவு விநியோக ஊழியர் சாலையில் சுயநினைவின்றி கிடப்பதையும்
அவரைச் சுற்றி பலர் நின்று
கொண்டிருந்ததையும் காட்டும் காணொளி ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
சுவா சூ காங் வட்டாரத்தில் உணவு விநியோக ஊழியர் ஓட்டிச் சென்ற மின்சைக்கிள் மீது கார் மோதியது. படுகாயம் அடைந்து சாலையில் சுயநினைவின்றி கிடந்த அந்த ஊழியருக்கு வழிப்போக்கர்கள் உதவினர்.
படம்: ஃபேஸ்புக்

