பசுமைத் திட்டங்களுக்கு உட்படும் விமானச் சேவைகளுக்கு முயற்சி

பசுமைத் திட்டங்களுக்கு உட்படும் விமானச் சேவைகளுக்கு முயற்சி

1 mins read
05ef34a3-b934-44a3-843e-62bd2285f8ec
-

பசு­மைத் திட்­டத்­துக்கு உட்­படும், சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஏற்­பு­டையதாக விமா­னச் சேவை­களை மாற்ற அமெ­ரிக்கா, பிரிட்­டன் ஆகிய நாடு­க­ளு­டன் சிங்­கப்­பூர் இணைந்து செயல்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது­தொ­டர்­பாக தற்­போது கன­டா­வின் மோன்ட்­ரி­யோல் நக­ரில் நடை­பெற்­று­வ­ரும் அனைத்­து­லக சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைப்­பின் பொதுக் கூட்­டத்­தில் இரண்டு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தி­டப்­பட்­டன. ஒப்­பந்­தங்­களில் போக்கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன், அமெ­ரிக்­கப் போக்­கு­

வ­ரத்து அமைச்­சர் பீட் பட்­டி­கி­யேக், பிரிட்­டிஷ் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஆன்-மரி டிவேல்­ய­னும் கையெ­ழுத்­திட்­ட­னர். அமெ­ரிக்­கா­வு­டன் சிங்­கப்­பூர் புரிந்­து­ணர்­வுக் குறிப்­பில் நேற்று முன்­தி­னம் கையெ­ழுத்­திட்­டது. அதன்­படி 'ஃபயோ­ஃபீட்' மூலம் விமா­னங்­க­ளுக்­குத் தேவை­யான எரி­பொ­ரு­ளைத் தயா­ரிப்­பது தொடர்­பாக இரு நாடு­களும் இணைந்து செயல்­படும்.

அது­மட்­டு­மல்­லாது, நீடித்த நிலைத்­தன்­மை­மிக்க திட்­டத்­துக்­கும் ஏற்­பு­டைய எரி­பொ­ரு­ளைப் பயன்­

ப­டுத்­தும் விமா­னங்­களில் பய­ணம் செய்ய பய­ணி­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வர். இத்­த­கைய விமா­னங்­கள் பய­ணம் செய்ய செலவு சற்று அதி­க­மாக இருக்­கக்­கூ­டும்.

சிங்­கப்­பூ­ருக்கும் அமெ­ரிக்­கா­வுக்­கும் இடை­யி­லான 15,000 கிலோ­மீட்­டர் தூரத்­தில் பசு­மைப் பாதை ஒன்­றும் அமைக்­கப்­ப­டக்­கூ­டும். இது­கு­றித்து இரு­நா­டு­களும் ஆய்வு நடத்தி வரு­கின்­றன.