முறையற்ற செயல்: கட்டாய சிகிச்சை உத்தரவு பரிசீலனை

முறையற்ற செயல்: கட்டாய சிகிச்சை உத்தரவு பரிசீலனை

1 mins read
93a7048d-c8f9-4327-b24a-7a185b46abe0
-
Google News Preferred Icon

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் உள்ள கழி­வ­றையை இளம் பெண் ஒரு­வர் பயன்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­த­போது அவ­ருக்­குத் தெரி­யா­மல் ஆட­வர் ஒரு­வர் அவ­ரது குட்­டைப் பாவ­டைக்­குள் காணொளி எடுத்­தார்.

ஆனால் இந்­தக் குற்­றத்­தைப் புரிந்த பிறகு சீன நாட்­ட­வ­ரான 22 வயது சோ சிவெ­னுக்­குக் குற்ற உணர்வு ஏற்­பட்­டது. அத­னால் அப்­பெண்­ணி­டம் மன்­னிப்பு கேட்க கழி­வ­றைக்கு வெளியே காத்­தி­ருந்­தார். அதற்கு முன்பு அந்த முறை­யற்ற காணொ­ளிப் பதி­வு­களை அவர் நீக்­கி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் 5ஆம் தேதி­யன்று நிகழ்ந்­தது. பாதிக்­கப்­பட்ட பெண்­ணுக்கு தற்­போது 20 வய­தா­கிறது.

அவர் கழி­வ­றை­யைப் பயன்­

ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­த­போது தம்­மைக் காணொளி எடுக்­கப் பயன்­

ப­டுத்­தப்­பட்ட கைத்தொலைபேசி யைப் பார்த்து கத்­தி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வத்­த­தால் அவர் மன­ரீ­தி­யா­கப் பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் நடந்­த­தைப் பற்றி சக மாண­வர்­க­ளி­டம் கூறி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

மாண­வி­யின் பேரா­சி­ரி­ய­ரி­டம் தக­வல் அளிக்­கப்­பட்ட பிறகு, வளா­கத்­தின் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கு இது­கு­றித்து தெரி­விக்­கப்­பட்­டது. குற்­றம் நிகழ்ந்த அதே நாளில் சோ கைது செய்­யப்­பட்­டார். அவர் தமது குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். இதேபோன்ற

குற்­றத்தை அவர் பல­முறை செய்­தி­ருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தார்.

கட்­டாய சிகிச்சை உத்­த­ர­வுக்கு சோ தகு­தி­யா­ன­வரா என்­பதை உறுதி செய்ய மாவட்ட நீதி­பதி ஜான் இங் உத்­த­ர­விட்­டுள்­ளார். கட்­டாய சிகிச்சை உத்­த­ர­வுக்­குத் தகுதி பெறு­ப­வர்­கள் சிறைத் தண்­ட­னைக்­குப் பதி­லாக மன­நல சிகிச்சை பெறு­வர்.