சொகுசுப் பொருள்கள் மோசடியில் ஈடுபட்ட தம்பதியர் சிங்கப்பூரிலிருந்து தப்பிச் செல்ல உதவிய இரண்டு மலேசிய ஆடவர்
களுக்குத் தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை 40 வயது முகம்மது இலியாசும் 38 வயது முகம்மது ஃபஸ்லி அப்துல் ரஹ்மானும் ஒப்புக்கொண்டனர். $32 மில்லியன் பெறுமானமுள்ள மோசடியில் ஈடுபட்ட சிங்கப்பூர் பி ஜியாபெங்கும் அவரது மனைவியான தாய்லாந்தைச் சேர்ந்த பன்சுக் சிரிவிப்பாவும் மலேசியாவுக்குத் தப்பினர்.
பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டு சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டனர்.


