முதியவரை மோதிய பேருந்து ஓட்டுநர் கைது

முதியவரை மோதிய பேருந்து ஓட்டுநர் கைது

1 mins read
8151119a-bd03-4ae7-91a3-acc05ced7bbb
படம்: SG ROAD VIGILANTE/பேஸ்புக் -

செங்காங் வட்டாரத்தில் 74 வயது முதியவரை மோதிய பேருந்து ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு எஸ்எம்ஆர்டி பேருந்தை ஓட்டிச்சென்ற அவர் முதியவரை மோதினார். கம்பஸ்வேல் சாலை, கம்பஸ்வேல் டிரைவ் இடைப்பட்ட சாலை விபத்தில் ஏற்பட்டது குறித்து காவல் துறைக்கும் குடிமை தற்காப்புப் படைக்கும் அழைப்பு கிடைத்தது.

பாதிக்கப்பட்ட முதியவர் மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்லப்பட்டார். இந்த விபத்தின் தொடர்பில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 68 வயது பேருந்து ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

110 எனும் பேருந்து சேவை சாலையில் வலது பக்கம் திரும்பும்போது விபத்து ஏற்பட்டதாக எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் இணை நிர்வாகத் தலைவர் கூறினார். ஓட்டுநர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.