கொவிட்-19 சம்பவங்கள் 35% முதல் 40% அதிகரிப்பு

சிங்­கப்­பூ­ரில் கடந்த சில நாட்­க­ளாக கொவிட்-19 தொற்­றுச்­சம்­ப­வங்­கள் தொடர்ந்து அதி­க­ரிக்­கிறது.

ஏறக்­கு­றைய 35 முதல் 40 விழுக்­காடு வரை தொற்று அதி­க­ரித்­துள்­ள­தாக சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

கொவிட்-19 தொற்­று­டன் வாழும் சூழலை நாடு கடைப்­பி­டித்து வரும் வேளை­யில் அமைச்­சின் எச்­ச­ரிக்கை வெளி­யா­கி­யுள்­ளது.

தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரிப்­ப­தற்கு உரு­மா­றிய ஒமிக்­ரான் பிஏ.2.75 கிரு­மியே முக்­கிய கார­ணம். மொத்த தொற்­றுச் சம்­ப­வங்­களில் இதன் பாதிப்பு மட்­டும் கால் விழுக்­கா­டா­கும். இதன்­படி பார்த்­தால் நாளுக்கு நாள் 900 முதல் 1,000 சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­கிறது.

அடுத்த சில வாரங்­க­ளி­லும் தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரிப்­பதை எதிர்­பார்க்­க­லாம் என்று கூறிய அமைச்சு, நிலை­மை­யைக் கண்­கா­ணித்து வரு­வ­தா­கத் தெரி­வித்­தது.

அதே சம­யத்­தில் கூடு­தல் தடுப்­பூசி போடா­த­வர்­கள் உடனே போட்­டுக்கொள்­ளும்­படி அது வலி­யு­றுத்­தி­யது.

"தொற்று அதி­க­ரித்­தா­லும் யாரும் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­ட­தற்­கான அறி­கு­றி­யில்லை. அன்­றா­டத் தொற்று அதி­க­ரிப்­ப­தால் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு கட்­ட­மைப்­புக்கு நெருக்­கடி ஏற்­ப­ட­வில்லை," என்று அது கூறி­யது.

உள்­ளூர் தொற்­றுச் சம்­ப­வங்­களில் இரு மாற்­றங்­களைச் கூர்ந்து கவ­னிக்க வேண்­டும் என்­றது அமைச்சு.

தொற்று ஏற்­பட்­ட­வர்­க­ளே மீண்­டும் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். செப்­டம்­பர் மாதம் தொடக்­கத்­தில் மொத்த தொற்­றுச் சம்­ப­வங்­களில் ஆறு விழுக்­கா­டாக இருந்த இது, இவ்­வா­ரம் பத்து விழுக்­காட்­டுக்கு அதி­க­ரித்­துள்­ளது. இந்த உயர்வு சிறி­ய­தாக இருந்­தா­லும் கவ­னத்­தில் கொள்­வது அவ­சி­யம். இது முதல் மாற்­றம்.

ஒமிக்­ரான் பிஏ.2.75 ரக கிரு­மி­யால் தொற்று அதி­க­ரித்­தி­ருப்­பது இரண்­டா­வது மாற்­ற­மா­கும்.

கொவிட்-19 விதி­மு­றை­கள் தளர்த்­தப்­பட்டு சமூக, ஒன்­று­கூ­டல் அதி­க­ரித்­துள்­ள­தால் மக்­க­ளி­டையே இந்த வகை பரவி வரு­கிறது.

இந்த நிலை­யில் பொது­மக்­கள் தனிப்­பட்ட, சமூ­கப் பொறுப்­பு­ணர்­வு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும் என்று அமைச்சு கேட்­டுக் கொண்­டது.

நெரி­ச­லான இடங்­க­ளி­லும் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டியவர்­களைச் சந்­திக்­கும்­போ­தும் முகக்­க­வ­சம் அணி­ய­லாம். உடல்­ந­ல­மில்­லா­த­வர்­கள் தொடர்ந்து வீட்­டில் தங்க வேண்­டும். வெளி­யில் செல்­வ­தைத் தவிர்க்க வேண்­டும். வெளி­யி­டத்­தில் அல்­லது அலு­வ­ல­கத்­தில் உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டால் உட­ன­டி­யாக வீட்­டுக்­குச் சென்று ஓய்­வெ­டுக்க வேண்­டும் அல்­லது மருத்துவ­ரின் ஆலோ­ச­னை­யைப் பெற வேண்­டும் என்று அமைச்சு சொன்­னது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!