மீண்டும் 950,000 சிங்கப்பூரர் குடும்பங்களுக்கு பற்றுச்சீட்டு

அர­சாங்­கம், பொருள் சேவை வரி உயர்­வின் பாரத்­தைக் குறைப்­ப­தற்­காக வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) வீடு­களில் வசிக்­கும் 950,000 சிங்­கப்­பூ­ரர் குடும்­பங்­க­ளுக்கு மீண்­டும் பொருள் சேவை வரி பற்­றுச்­சீட்­டு­களை வழங்­கு­கிறது.

'யுசேவ்' மற்­றும் சேவை பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணத் தள்­ளு­ப­டி­களும் உள்­ள­டக்­கிய பற்­றுச்­சீட்டு அக்­டோ­பர் மாதம் வழங்­கப்­படும் என்று நிதி அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

யுசேவ் பற்­றுச்­சீட்­டுக்­கான மதிப்பு $100 முதல் $190 வரை இருக்­கும்.

சேவை பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணத் தள்­ளு­ப­டி­கள் அரை மாதத்­தி­லி­ருந்து ஒரு மாதம் வரை இருக்­கும். கடந்த ஜூலை­யில் வழங்­கப்­பட்ட சலு­கை­க­ளைப் போல இம்­மு­றை­யும் இருக்­கும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

தற்­போ­தைய நிதி­யாண்­டில் மூன்­றா­வது முறை­யாக பொருள் சேவை வரி பற்­றுச்­சீட்டு வழங்­கப்­ப­டு­கிறது. கடந்த ஏப்­ரல் மாதம் முதல் முறை­யாக பற்­றுச்­சீட்­டு­கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

கடைசி தவ­ணைப் பற்­றுச்­சீட்டு அடுத்த ஆண்டு ஜன­வ­ரி­யில் விநி­யோ­கிக்­கப்­ப­டு­கிறது.

2022 வரவுசெல­வுத் திட்­டத்­தில் அறி­விக்­கப்­பட்ட பொருள், சேவை வரிக்­கான நிரந்­த­ரப் பற்­றுச்­சீட்­டுத் திட்­டம் மற்­றும் குடும்­பங்­க­ளுக்­கான ஆத­ர­வுத் தொகுப்­புத்­திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இந்­தப் பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

பொருள் சேவை வரி உயர்­வை­யும் இதர வாழ்க்­கைச் செல­வு­க­ளை­யும் சமா­ளிக்க குறைந்த, நடுத்­தர வரு­மான சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளுக்கு பற்­றுச்சீட்டு உத­வும் என்று நிதி அமைச்சு சொன்­னது.

மேம்­பட்ட ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்டு திட்­டத்­தின் மூலம் ஆண்­டுக்கு ஒன்­றரை மாதம் முதல் மூன்­றரை மாதங்­கள் வரை­யில் சேவை, பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணத்­தில் கழிவு கிடைக்­கும்.

சென்ற நிதி­யாண்­டி­லி­ருந்து இந்த நிதி­யாண்டு வரை யுசேவ் கழிவு இரண்டு மடங்­கா­கி­யுள்­ளது. இதன்­படி ஓரறை மற்­றும் ஈரறை வீவக வீடு­களில் வசிக்­கும் சரா­சரி சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளுக்கு எட்டு முதல் பத்து மாதங்­கள் வரை பய­னீட்­டுக் கட்­ட­ணத்­தில் சலுகை கிடைக்­கும்.

இதுவே மூவறை அல்­லது நான்­கறை வீடு­களில் வசிக்­கும் குடும்­பங்­க­ளுக்கு நான்கு முதல் ஆறு மாதம் வரை­யி­லான கட்­ட­ணக் கழிவு இருக்­கும்.

இந்த நிதி­யாண்­டில் மட்­டும் இவ்­விரு சலு­கை­க­ளுக்­காக அர­சாங்­கம் மொத்­தம் 720 மில்­லி­யன் வெள்­ளியை செல­வி­டு­கிறது. வீவக வீட்­டைப் பொறுத்து ஒவ்­வொரு குடும்­ப­மும் $440 முதல் $760 வரை யுசேவ் கழிவு பெறு­வார்­கள்.

செப்­டம்­ப­ரில் 1.2 மில்­லி­யன் குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட $100 பய­னீட்டு உத­வித் தொகைக்கு மேலாக இந்­தச் சலு­கை­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!