வெளிநாட்டு கட்டடைப்புகள், நிபுணத்துவ அட்டையின்கீழ் (ஒன் பாஸ்) வெளிநாட்டு திறனாளர்களை ஈர்க்கும் முயற்சியை சிங்கப்பூர் எடுத்துள்ளது. இதனால் உயர்மட்ட நிர்வாக வாய்ப்புகளை சிங்கப்பூரர்கள் இழக்க மாட்டார்கள் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.
உண்மையைச் சொல்லப்போனால் உலகம் முழுவதும் இருந்து வரும் திறனாளர்களுடன் சேர்ந்து முன்னணி நிறுவனங்களில் அதிக சிங்கப்பூரர்கள் பணியாற்றும் வாயப்பு இருக்கிறது.
மேலும் சிங்கப்பூரர்கள் தங்கள் வாழ்க்கைத் தொழிலில் மேலும் முன்னேற முடியும் என்று நேற்று ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்ட தகவலில் அமைச்சர் தெரிவித்தார்.
பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம் செப்டம்பர் 23ஆம் தேதி ஃபேஸ்புக் வழி கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
செங்காங் குழுத் தொகுதியைச் சேர்ந்த இருவரின் கருத்து ஜேம்ஸ் லிம்மின் பதிவில் இடம்பெற்றிருந்தது. அவற்றில் ஒன்று, உள்ளூர் திறனாளர்கள் மீது ஒன்பாஸ் ஏற்படுத்தக்கூடிய பின்விளைவுகள், மற்றொன்று, வேலை சந்தையில் உள்ளூர்காரர்கள் மீது பாகுபாடு காட்டுவது.
'ஒன்பாஸ்' உயர்மட்ட தகுதியை மீறி நிறுவனங்களில் உயர் நிர்வாகப் பொறுப்புகளுக்கு முன்னேறு வதில் உள்ளூர்காரர்களின் சிரமங்களை மேலும் மோசமாக்கும் என்று ஒரு குடியிருப்பாளரின் கவலையை பேராசிரியர் லிம் குறிப்பிட்டு இருந்தார்.
சீனாவில் பணியாற்றி நல்ல அனுபவம் இருந்தபோதும் அந்த குடியிருப்பாளருக்கு சிங்கப்பூரில் வேலை கிடைக்க சிரமம் இருந்தது என்று கூறப்படுகிறது.
இதற்குப் பதிலளித்த டாக்டர் டான், 'ஒன்பாஸ்' மூலம் உலகத் திறனாளர்களைக் கொண்டு வருவதே சிங்கப்பூரர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கவே என்றார்.
வெளிநாட்டுத் திறனாளர்கள் தேவை என்பதை பாட்டாளிக் கட்சி நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
உள்ளூர் திறனாளர்களை அதிகரிக்க வர்த்தகங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

