'உயர்மட்ட நிர்வாக வாய்ப்புகளை சிங்கப்பூரர்கள் இழக்க மாட்டார்கள்'

'உயர்மட்ட நிர்வாக வாய்ப்புகளை சிங்கப்பூரர்கள் இழக்க மாட்டார்கள்'

2 mins read
842ce1b5-e0d1-4083-840d-f4426df2ce9e
-

வெளி­நாட்டு கட்­ட­டைப்­பு­கள், நிபு­ணத்­துவ அட்­டை­யின்கீழ் (ஒன் பாஸ்) வெளி­நாட்டு திற­னா­ளர்­களை ஈர்க்­கும் முயற்­சியை சிங்­கப்­பூர் எடுத்­துள்­ளது. இத­னால் உயர்­மட்ட நிர்­வாக வாய்ப்­பு­களை சிங்­கப்­பூ­ரர்­கள் இழக்க மாட்­டார்­கள் என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்­தார்.

உண்­மை­யைச் சொல்­லப்­போ­னால் உல­கம் முழு­வ­தும் இருந்து வரும் திற­னா­ளர்­க­ளு­டன் சேர்ந்து முன்­னணி நிறு­வ­னங்­களில் அதிக சிங்­கப்­பூ­ரர்­கள் பணி­யாற்­றும் வாயப்பு இருக்­கிறது.

மேலும் சிங்கப்பூ­ரர்­கள் தங்­கள் வாழ்க்­கைத்­ தொ­ழி­லில் மேலும் முன்­னேற முடி­யும் என்று நேற்று ஃபேஸ்புக் பதி­வில் வெளி­யிட்ட தக­வ­லில் அமைச்­சர் தெரி­வித்­தார்.

பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜேமஸ் லிம் செப்­டம்­பர் 23ஆம் தேதி ஃபேஸ்புக் வழி கேட்ட கேள்­விக்கு அவர் பதி­ல­ளித்­தார்.

செங்­காங் குழுத் தொகு­தி­யைச் சேர்ந்த இரு­வ­ரின் கருத்து ஜேம்ஸ் லிம்­மின் பதி­வில் இடம்­பெற்­றி­ருந்­தது. அவற்­றில் ஒன்று, உள்­ளூர் திற­னா­ளர்­கள் மீது ஒன்­பாஸ் ஏற்­ப­டுத்­தக்கூடிய பின்விளை­வு­கள், மற்­றொன்று, வேலை சந்­தை­யில் உள்­ளூர்­கா­ரர்­கள் மீது பாகுபாடு காட்டுவது.

'ஒன்­பாஸ்' உயர்­மட்ட தகு­தியை மீறி நிறு­வ­னங்­களில் உயர் நிர்­வா­கப் பொறுப்­பு­களுக்கு முன்­னேறு­ வ­தில் உள்­ளூர்­கா­ரர்களின் சிர­மங்­களை மேலும் மோச­மாக்­கும் என்று ஒரு குடியிருப்பாளரின் கவலையை பேராசிரியர் லிம் குறிப்­பிட்டு இருந்­தார்.

சீனாவில் பணியாற்றி நல்ல அனுபவம் இருந்தபோதும் அந்த குடியிருப்பாளருக்கு சிங்கப்பூரில் வேலை கிடைக்க சிரமம் இருந்தது என்று கூறப்படுகிறது.

இதற்குப் பதிலளித்த டாக்டர் டான், 'ஒன்பாஸ்' மூலம் உலகத் திறனாளர்களைக் கொண்டு வருவதே சிங்கப்பூரர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கவே என்றார்.

வெளிநாட்டுத் திறனாளர்கள் தேவை என்பதை பாட்டாளிக் கட்சி நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

உள்ளூர் திறனாளர்களை அதிகரிக்க வர்த்தகங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.