சிங்கப்பூர் முன்னேற்றப் பாதையில் ருவாண்டா

சிங்கப்பூர் முன்னேற்றப் பாதையில் ருவாண்டா

2 mins read
b70f86c9-0f35-4a0e-b21a-1f671e1e7199
-

சிங்­கப்­பூ­ரின் அடிச்­சு­வட்­டைப் பின்­பற்­றியே ருவாண்டா வெற்றி பெற்று உள்­ளது என்று அந்­நாட்­டின் அதி­பர் பால் காகேமே தெரி வித்­துள்­ளார்

மக்­க­ளி­டம் முத­லீ­டு­ செய்­தது, விவே­க­மான கொள்கை வாய்ப்­பு­களை பின்பற்றியது, புத்­தாக்க முறை­களை புகுத்­தி­யது போன்­ற­வற்றை உள்­ள­டக்­கிய பாதை­யில் ருவாண்டா பய­ணித்­தது என்று அவர் கூறி­னார்.

நாட்டு நிர்­மா­ணத்­தில் சிங்­கப் பூரின் வெற்­றிக் கதை எங்­க­ளுக்­கும் பொருத்­த­மா­ன­தாக இருக்­கிறது என்­றார் அவர்.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்கழ­கத்­தில் நேற்று நடந்த நிகழ்ச்­சி­யில் ருவாண்­டா­வின் வளர்ச்சி பற்றி அவர் விரி­வுரை ஆற்­றி­னார்.

தன்­னு­டைய நாட்­டின் வளர்ச்சி எளி­தாக வந்­து­வி­ட­வில்லை என்று குறிப்­பிட்ட திரு காகேமே, மற்ற நாடு­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மாக அது விளங்­கு­வ­தா­க­வும் கூறி­னார்.

என்­டியு மாஜுலா விரி­வுரை தொட­ரின் ஒரு பகு­தி­யாக இந்த நிகழ்ச்சி நடை­பெற்­றது.

திரு காகேமே தமது நாட்­டின் புதிய வளர்ச்­சி­க­ளைப் பற்­றி­யும் பகிர்ந்­து­கொண்­டார்.

"கொள்­ளை­நோய் பர­விய காலத்­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரைப் போல ருவாண்­டா­வும் தடுப்­பூசி, மருந்­துத் தயா­ரிப்பு நிலை­யங்­களை அமைக்­கும் முயற்­சி­களை எடுத்து வரு­கிறது.

"அடுத்த ஆண்­டில் ஜெர்­மன் மருந்து நிறு­வ­ன­மான பயோ­என்­டெக்­கு­டன் சேர்ந்து கிகா­லி­யில் முதல் 'mRNA' தடுப்­பூசி வசதி அமைக்­கும் பணி தொடங்­கப்­படும். அது, முடி­வ­டை­யும்­போது ஆப்­பி­ரிக்­கா­வின் முதல் mRNA தடுப்­பூசி தொழிற்­சா­லை­யாக இருக்­கும்," என்று அதி­பர் சொன்­னார். ருவாண்டா படு­மோ­ச­மான நிலை­யில் இருந்து முன்­னேறி யிருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார். 1994ல் நடந்த படு­கொலை சம்­ப­வத்­தில் ஏறக்­கு­றைய 800,000 பேர் பெரும்­பா­லும் டுட்சி சிறுபான்மை இனத்­தைச் சேர்ந்தவர்­கள் கொல்­லப்­பட்­ட­னர். பொதுச் சொத்­து­கள் நாச­மாக்­கப்­பட்­டன.

இன்று ருவாண்டா மீண்டு நல்ல நிலைக்கு வந்­துள்­ளது. இன்­ன­மும் பய­ணிக்க வேண்­டிய பாதை வெகு­தூ­ரம் உள்­ளது என்று அதி­பர் காகேமே தெரி­வித்­தார்.

மத்­திய ஆப்­பி­ரிக்­கா­வில் உள்ள ருவாண்­டா­வில் 12 மில்­லி­யன் மக்­கள் வசிக்­கின்­ற­னர்.