'ஓமிக்ரானுக்கு நோய் எதிர்ப்பு சிகிச்சை பலனளிக்கவில்லை'

'ஓமிக்ரானுக்கு நோய் எதிர்ப்பு சிகிச்சை பலனளிக்கவில்லை'

1 mins read
a84f8311-7fcd-43e3-9b32-969f1141dae6
-

ஓமிக்­ரா­னுக்கு எதி­ரான நோய் எதிர்ப்பு சிகிச்சை பல­ன­ளிக்­ காததால் அத்­த­கைய சிகிச்­சைக்கு இனி பரிந்­துரை செய்­யப்­ப­டாது என்று தொற்­று­நோய் ­க­ளுக்­கான தேசிய நிலை­யம் தெரி­வித்­தது.

கடந்த ஆண்­டி­லி­ருந்து ஓமிக்­ரா­னுக்கு எதி­ராக நோய் எதிர்ப்பு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்­தது.

இந்த நிலையில் 'casirivimab-imdevimab' சிகிச்­சைக்கு பரிந்­துரை செய்ய மாட்­டோம் என்று நிலை­யத்­தின் மருந்­தி­யல் இயக்கு­நர் ஷான் வாசூ தெரி­வித்­தார்.

கடந்த 2021 செப்­டம்­ப­ரில் தொற்­று­நோய் சிறப்பு அனு­ம­தி­யின்­கீழ் அத்­த­கைய சிகிச்­சையை வழங்க சுகா­தார அறி­வி­யல் கழ­கம் இடைக்­கால அனு­ம­தியை வழங்­கி­யி­ருந்­தது.

ஆனால் செப்­டம்­பர் 15ஆம் தேதி 'casirivimab-imdevimab' சிகிச்சை முறை­யைப் பயன்­ப­டுத்து­ வ­தற்கு எதி­ராக உலக சுகாதார நிறுவனம் முக்­கிய ஆலோ­ச­னையை வழங்­கி­யது. புதிய உரு­மா­றிய கிரு­மிக்கு எதி­ராக அதன் செயல்­தி­றன் வலு­வாக இல்லை என்­பதே அதற்கு கார­ணம்.