வீடு வாங்குவதற்கான கடனை அரசாங்கம் கடுமையாக்கியுள்ளது. இதனால் கடனை திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகப்படுத்தியுள்ள நிலையில் சொத்துச் சந்தையை மட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் நாணய ஆணையம், தேசிய வளர்ச்சி அமைச்சு, வீடமைப்புக் கழகம் ஆகியவை இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கை தெரிவித்தது.
வீடு வாங்குவோர் தங்களுடைய சக்தியை மீறி வீட்டுக் கடன் வாங்குவதைத் தவிர்க்கும் நோக்கத்தில் புதிய நடவடிக்கை நேற்று முன்தினம் அமலுக்கு வருகிறது.
மொத்த கடன் வழங்கும் விகிதம் மற்றும் அடமானக் கடன் வழங்கும் விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடப் பயன்படுத்தும் வட்டி விகிதத்தை ஆணையம் 0.5 விழுக்காட்டுப் புள்ளிக்கு உயர்த்தியிருக்கிறது. இந்த வட்டிவிகிதம், தனியார் நிதி நிறுவனங்களுக்கானது. வீவக வீடுகள் வாங்குவதற்கும் கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி வீவக வீடுகள் வாங்குவதற்கான கடன் தகுதி 3 விழுக்காடு வட்டி விகிதத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

