செய்­திக்­கொத்து

செய்­திக்­கொத்து

1 mins read
63c888da-6138-427c-933a-d9ffa02756c3
-

$85,000 ஏமாற்றிய போலி வழக்கறிஞர்

தோங்­­­­ மெங் ஃபீ எனும் 46 வயது ஆடவர் 'குரோபர்சுனிட்டி கன்சல்டிங்' எனும் ஆலோசனை சேவை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

தான் ஒரு வழக்கறிஞர் என்றும் இது சட்ட நிறுவனம் என்றும் பொய்யுரைத்து அவர் பத்துப் பேரிடம் மொத்தம் $84,598க்கு மேலான தொகையை

ஏமாற்றினார்.

இவரது நிறுவனத்தில் வேலைபார்த்த ஊழியர்களுக்குக்கூட தோங் போலி வழக்கறிஞர் என்ற விவரம் தெரிந்திருக்கவில்லை.

தோங், 2000ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடையில் பலமுறை சிறைத்தண்டனை பெற்றவர்.

ஏமாற்றியதாகச் சுமத்தப்பட்ட எட்டு குற்றச்சாட்டுகளை நேற்று அவர் ஒப்புக்கொண்டார்.

வானிலை முன்னுரைப்பு: இம்மாத முற்பாதியில் மழை அதிகம்

சிங்கப்பூரில் இம்மாத முற்பாதியில், பெரும்பாலான நாள்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

காலை நேரத்திலும் பிற்பகலில் முன்னேரத்திலும் மழை பெய்யக்கூடும்.

தினசரி வெப்பநிலை பெரும்பாலும் 24 டிகிரி செல்சியசுக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில நாள்களில் வெப்பநிலை 23 முதல் 32 டிகிரி செல்சியசுக்கு இடைப்பட்டிருக்கும்.

இந்த மாத முற்பாதியில் மொத்த மழையின் அளவு சராசரிக்கு அதிகமாக இருக்கும் என்று சிங்கப்பூர் வானிலை நிலையம் முன்னுரைத்துள்ளது.

இம்மாத இரண்டாம் வாரத்தில் அதிகாலை, காலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.