மார்பகப் புற்றுநோய் பரிசோதனை: முன்கூட்டி செய்தால் உயிரைக் காக்கலாம்

பொன்மணி உதயகுமார்

மார்­ப­கப் புற்­று­நோய் தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் மாதம் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்­கப்­பட்­டது. தக்க நேரத்­தில் பரி­சோ­தனை செய்­வது உயி­ரைக் காக்­கும் என்ற கருப்­பொ­ரு­ளில் நடக்­கும் இவ்­வாண்­டின் விழிப்­பு­ணர்வு மாதத்தை ஒட்டி, பல நிகழ்ச்­சி­க­ளுக்கு மார்­ப­கப் புற்று நோய் அறக்­கட்­ட­ளை­யும் இதர சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களும் இணைந்து ஏற்­பாடு செய்­துள்­ளன.

ஈராண்­டுக்­குப் பிறகு நேரில் நடக்­கும் இந்த விழிப்­பு­ணர்வு மாதத் தொடக்க நிகழ்ச்­சி­யில் அதி­பர் ஹலிமா யாக்­கோப், பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரும் தேசிய வளர்ச்சி, நிதி ஆகி­ய­வற்­றின் இரண்­டாம் அமைச் சரு­மான இந்­தி­ராணி ராஜா, சுகா­தார, சட்ட அமைச்­சு­க­ளின் மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் ரஹாயு மஹ்­ஸாம் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

இம்­மா­த­மும் அடுத்த மாத­மும் சிங்­கப்­பூர் புற்­று­நோய்ச் சங்­கம், குறிப்­பிட்ட பரி­சோ­தனை நிலை­யங்­களில் மார்­ப­கப் புற்று நோயைக் கண்­ட­றி­யும் 'மெமோ­கி­ராம்' மருத்­து­வப் பரி­சோ­த­னையை மேற்­கொள்ள $25 நிதி­யு­தவி வழங்­கும். சிங்­கப்­பூர் தேசி­யப் பல் கலைக்­க­ழக புற்­று­நோய்க் கழ­கம், குறிப்­பிட்ட பல­துறை மருந்­த­கங் களில் கூடு­தல் $10 நிதி­யு­த­வியை வழங்­கும்.

மார்­ப­கப் புற்­று­நோயை ஆரம்ப கட்­டத்­தி­லேயே கண்­ட­றிந்­தால் பாதிக்­கப்­ப­டு­ப­வ­ரின் உயிர்­வாழ்வு விகி­தம் 90 விழுக்­கா­டாக இருக்­கும் நிலை­யி­லும், 2020ல், 50லிருந்து 69 வய­திற்கு உட்­பட்ட பெண்­களில், ஐந்­தில் இரண்டு பேர் மட்­டுமே 'மெமோ­கி­ராம்' பரி­சோ­த­னை செய்­து­கொண்­ட­னர் என்­பதை அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா தம் உரை­யில் சுட்­டிக்­காட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரைப் பொறுத்­த­வ­ரை, பெண்­க­ளை அதி­கம் பாதிப்­பது மார்­ப­கப் புற்­று­நோய் என்­றும் புற்­று­ நோ­யால் நேரும் மர­ணங்­களில் அதி­க­மா­னவை மார்­ப­கப் புற்­று ­நோ­யால் நிகழ்­கின்­றன என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

தவ­றான தக­வல்­களை நம்­பு­ வ­தைத் தவிர்த்து, மருத்­துவப் பரி ­சோ­த­னை­க­ளுக்கு நேரத்­தோடு செல்­ல­வேண்­டும் என்­று பெண்­களை அவர் வலி­யு­றுத்­தி­னார்.

விழிப்­பு­ணர்வு மாதத்­தின் ஓர் அங்­க­மாக, இம்­மாத இறு­தி­வரை, மார்­ப­கப் புற்­று­நோய் அறக்­கட்­டளை ஏற்­பாடு செய்­துள்ள 'பிரா­ஆர்ட்' கண்­காட்­சியை ஐயோன் ஆர்ச்­சர்ட் கடைத்­தொ­கு­தி­யின் அடித்­த­ளத்­தில் இல­வ­ச­மா­கக் காண­லாம்.

ஆடை­ய­ணி­க­லன் மூலம் விழிப்­பு­ணர்வை உண்­டாக்­கு­வது இதன் இலக்கு.

இந்தக் கண்­காட்­சி­யின் ஓர் அங்­க­மாக நடந்த போட்­டி­யில் சிறந்த மூன்று மாணவ வடி­வ­மைப்­பா­ளர்­கள் நேற்று அதி­ப­ரி­ட­மி­ருந்து பரிசு பெற்­ற­னர்.

மேலும், 'பிங்க் ரிப்­பன் வாக் 2022', அனைத்து மொழி­க­ளி­லும் கருத்­துக்­க­ளங்­கள், ஆத­ரவு தெரி­விக்­கும் ஒளி­யூட்­டு­கள் போன்­றவை இம்­மா­தம் முழு­வ­தும் நடை­பெற உள்­ளன.

மார்­பக சுகா­தா­ரத்­திற்கு நேரம் ஒதுக்­குங்­கள் என்ற தலைப்­பில் தமி­ழில் ஒரு கருத்­துக்­க­ளம் அஸ்­யஃபா பள்­ளி­வா­ச­லில் இம்­மா­தம் 16ஆம் தேதி பிற்­ப­கல் 3 மணி­யி­லி­ருந்து மாலை 4 மணி வரை நடை­பெ­றும்.

விழிப்­பு­ணர்வு மாதத்­தில் சிங்­கப்­பூ­ரின் ஆறு பாலங்­கள், மெர்­ல­யன், கடைத்­தொ­கு­தி­கள் என்று பல­த­ரப்­பி­னர் கட்­ட­டங்­களை இளஞ்­சி­வப்­பில் ஒளி­யூட்­டு­வார்­கள் அல்­லது பொருள்­க­ளைக் கொண்டு அலங்­க­ரிப்­பார்­கள்.

மார்­ப­கப் புற்­று­நோய் விழிப்­பு­ணர்­வுக்கு ஆத­ரவு தெரி­விக்க விரும்­பு­வோர், ஐந்து இடங்­களில் உள்ள தானி­யங்கி விற்­பனை இயந்­தி­ரங்­களில் இளஞ்­சி­வப்பு நிற ரிப்­பன்­களை வாங்­கிக்­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!