சுத்தம் பேணாத ‘தோஃபு’ உற்பத்தியாளருக்கு அபராதம்

'தோஃபு' எனும் சோயா உண­வுப்­பொ­ரு­ளைத் தயா­ரிக்­கும் 'ஹென்­சின் ஃபுட்' நிறு­வ­னம் அதன் வளா­கத்­தைச் சுத்தமாக வைத்­துக்­கொள்­ளா­த­தால் நேற்று $4,200 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

கடந்த ஜன­வரி மாதம் 19ஆம் தேதி சிங்­கப்­பூர் உணவு அமைப்­பின் அதி­கா­ரி­கள் அந்த வளா­கத்­தைச் சோத­னை­யிட்­ட­போது அங்கு நிறைய கரப்­பான் பூச்­சி­கள் இருப்­ப­தைக் கண்­டு­பி­டித்­த­னர். அதற்கு மறு­நாள் நிறு­வ­னத்­தின் உரி­மம் தற்­கா­லி­க­மாக ரத்து செய்­யப்­பட்­டது. நிறு­வ­னம் தயா­ரித்த 'தவ் குவே' உண­வுப் பொருள்­க­ளைத் திரும்­பப் பெறும்­ப­டி­யும் அறி­வு­றுத்­தப்­பட்­டது.

அதி­கா­ரி­கள் சுட்­டிக்­காட்­டிய குறை­க­ளைச் சீர்­ப­டுத்­திய பிறகு, பிப்­ர­வரி 9ஆம் தேதி மீண்­டும் செயல்­பட அந்­நி­று­வ­னத்­திற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது.

உண­வுப் பாது­காப்பு என்­பது கூட்­டுப் பொறுப்பு என்று குறிப்­பிட்ட சிங்­கப்­பூர் உணவு அமைப்பு, உணவு நிறு­வ­னங்­களில் சுகா­தா­ரக் குறை­வான நட­வ­டிக்­கை­க­ளைக் கண்­டால் உட­ன­டி­யாக அது­பற்­றித் தக­வல் அளிக்­கும்­படி பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!