நாகப்பட்டினம் சங்க ஆண்டிறுதிப் பொதுக்கூட்டம்

நாகப்பட்டினம் சங்க ஆண்டிறுதிப் பொதுக்கூட்டம்

1 mins read
558f801e-2290-42ea-93af-decb84c56eee
-

17ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரில் குடி­யே­றி­ய­வர்­களில் நாகப்­பட்­டி­னத்­தைச் சேர்ந்த மூதா­தை­யர் இருந்­த­னர். நாகப்­பட்­டி­னத்­தில் இருந்து கிழக்கு ஆசி­யா­விற்கு பய­ணம் செய்­த­வர்­களில் பலர் சிங்­கப்­பூரை தங்­கள் தாய­க­மாக்­கிக்­கொண்­ட­னர்.

1960களில் சிங்­கப்­பூ­ரில் சமூக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட சங்­கம், முஸ்­லிம் ஜமா­அத் நாகப்­பட்­டி­னம் என்று அழைக்­கப்­பட்­டது.

நாகப்­பட்­டி­னத்­தைச் சேர்ந்த 900 பேர் கொண்ட சுமார் 250 குடும்­பங்­கள் சிங்­கப்­பூ­ரில் தற்­போது வசிக்­கின்­ற­னர். அவர்­களில், நாட்­டின் வளர்ச்­சிக்கு பாடு­பட்ட அடித்­த­ளத் தலை­வர்­கள், மருத்­து­வர்­கள், வழக்­க­றி­ஞர்­கள், பேரா­சி­ரி­யர்­கள், ஆசி­ரி­யர்­கள், பொறி­யா­ளர்­கள், தொழில்­மு­னை­வர் ஆகி­யோர் அடங்­கு­வர்.

சங்­கத்­தின் பல்­வேறு சமூக பங்­க­ளிப்­பு­களில் தங்­களை இணைத்­துக்­கொண்டு இவர்­கள் செயல்­பட்­ட­னர். கடந்த 2019ல் நாகப்­பட்­டி­ன சங்­கம் பதிவு செய்­யப்­பட்டு தமி­ழ­கத்­தில் அம்­மா­வட்­டத்­தைச் சேர்ந்த அனை­வ­ரை­யும் உள்­ள­டக்கி, சிங்­கப்­பூ­ருக்­குப் பங்­க­ளிப்பு செய்­து­ வ­ரு­கின்­றது.

இந்­திய முஸ்­லிம் பேர­வை­யின் இணை அமைப்­பு­களில் ஒன்­றா­கச் செயல்­படும் நாகப்­பட்­டி­னம் சங்­கத்­தின் ஆண்­டி­று­திப் பொதுக் கூட்­டம் சங்­கத்­தின் தலை­வர் ஹாஜி எஸ்.ஜெக­பர் சாதிக் தலை­மை­யில் அப்­துல் கபூர் பள்­ளி­வா­ச­லில் சென்ற மாதம் 25ஆம் தேதி மாலை நடை­பெற்­றது.

ஆண்­ட­றிக்கை வாசிக்­கப்­பட்டு, சங்­கம் எதிர்­நோக்­கும் சவால்­களை எடுத்­துக்­கூறி உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் ஒத்­து­ழைக்­கக் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது. ஆண்­டி­றுதி வரவுசெலவு கணக்­கு­க­ள் சமர்ப்­பிக்­கப்­பட்டு, சங்­கத்­தின் வளர்ச்­சித் திட்­டங்­கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.