வரு­மான வரி ஏய்ப்பு செய்த விமா­னி­மீது குற்­றச்­சாட்டு

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வன விமானி மீது, ஆறு ஆண்­டு­க­ளுக்­கு­மேல் வரு­மான வரி ஏய்ப்பு செய்­தது, வாடகை மூலம் கிடைக்­கும் வரு­வாய் தொடர்­பில் போலி ஆவ­ணங்­க­ளைச் சமர்ப்­பித்­தது உள்­ளிட்ட 13 குற்­றச்­சாட்­டு­கள் நேற்று சுமத்­தப்­பட்­டுள்­ளன.

அவர் 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை­யி­லான தனது வரு­வா­யைக் குறைத்­துக் கூறி­ய­தால், 59,000 வெள்­ளிக்­கு­மேல் வரி ஏய்ப்பு செய்­துள்­ளார். சிங்­கப்­பூ­ர­ரான இந்த 50 வயது விமா­னி­யின் பெயர் ஆண்ட்ரூ சூ செங் அய்.

முதன்­மு­த­லில் 2013ஆம் ஆண்­டுக்­கான வரு­மான விவ­ரங்­களில் 56,866 வெள்ளி விடு­பட்­டி­ருப்­பதை, சூ வரு­மான வரி ஆணை­ய­ருக்­குத் தெரி­விக்­கத் தவ­றி­னார். இத­னால் அவ­ருக்கு 9,188 வெள்ளி குறை­வான வரி விதிக்­கப்­பட்­டது.

அடுத்த ஆறு ஆண்­டு­களில் அவர் வேண்­டு­மென்றே தனது வரு­வா­யைக் குறைத்­துக் காட்­டி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

மேலும், 2018 ஜூனில் பாலஸ்­டி­யர் சாலை, கிம் யாம் சாலை ஆகி­ய­வற்­றில் அவ­ருக்­குச் சொந்­த­மான இடங்­களில் இருந்து பெற்ற வாட­கைப் பணம் தொடர்­பி­லும் சூ வரி ஏய்ப்பு செய்­த­தா­கக் கூறப்­பட்­டது. விவ­ரங்­கள் கேட்­ட­போது வேண்­டு­மென்றே மின்­னஞ்­ச­லில் தவ­றான தக­வல்­களை அனுப்­பி­ய­தும் தெரி­ய­வந்­துள்­ளது. இத­னால் 2013ஆம் ஆண்­டுக்­கும் 2018ஆம் ஆண்­டுக்­கும் இடை­யி­லான வாட­கைப் பணம் தொடர்­பில் அவர் 229,307 வெள்­ளி­யைக் குறைத்­துக் காட்­டி­யுள்­ளார்.

விமானி சூ விசா­ர­ணை­யில் ஒத்­து­ழைப்­ப­தைச் சுட்­டிய அவ­ரது வழக்­க­றி­ஞர், பணி­நி­மித்­த­மாக அவர் வெளி­நாடு செல்ல அனு­மதி வேண்­டி­னார். சூ, சிங்­கப்­பூ­ரில் மட்­டு­மின்றி வெளி­நா­டு­க­ளி­லும் சொத்­து­கள் வாங்­கி­யி­ருப்­ப­தைக் குறிப்­பிட்ட அர­சாங்க வழக்­க­றி­ஞர், விமா­னி­யான அவர் வெளி­நாடு செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டால் அவ­ருக்­கான பிணைத்­தொ­கையை இரு­ம­டங்­காக்­கக் கோரி­னார்.

பிணைத்­தொகை $80,000லிருந்து $140,000க்கு உயர்த்­தப்­பட்டு, பணி­நி­மித்­தம் வெளி­நாடு செல்ல விமானி சூவிற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

விசா­ரணை வரும் நவம்­பர் மாதம் தொட­ரும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!