'சிஎன்ஏ'க்கு அனைத்துலக விருது

'சிஎன்ஏ'க்கு அனைத்துலக விருது

1 mins read
b3dd11bd-1516-4fc2-91ed-49f1493c5017
-
Google News Preferred Icon

மீடியாகார்ப்பின் 'சிஎன்ஏ' இணையத்தளத்திற்கு சிறந்த செய்தித் தளத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான மின்னிலக்க ஊடகத்துறை விருது நிகழ்ச்சியில் இந்த விருது அறிவிக்கப்பட்டது.

ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா, வட அமெரிக்கா, தெற்காசியா என வட்டார அளவில் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் பின்னர் உலகளாவிய போட்டியில் சோதிக்கப்பட்டன.

வடிவமைப்பு, உள்ளடக்கம், பயனாளர் அனுபவம், தொழில்நுட்ப அம்சம் உள்ளிட்ட அம்சங்களில் உன்னதத்துக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

இந்த விருதைப் பெறும் முதல் தென்கிழக்காசிய செய்திக் கட்டமைப்பு என்ற பெருமை 'சிஎன்ஏ'வைச் சாரும். சென்ற ஆண்டு வாஷிங்டன் போஸ்ட்டும், 2020ல் கார்டியன் நிறுவனமும் இந்த விருதை வென்றன.