$15.7 மில்லியன் மோசடி: 312 பேரிடம் விசாரணை

$15.7 மில்லியன் மோசடி: 312 பேரிடம் விசாரணை

2 mins read
d761e1a3-1da8-4daa-b37f-d775b7a9caf1
-

இணை­யம் வழி காதல் மோசடி, கடன், வங்­கித் தக­வல்­கள், இணைய வர்த்­தகத் தக­வல்­கள், இவற்­று­டன் அர­சாங்க அதிகாரிகள் போலவும் சீன அதி­கா­ரி­கள் போலவும் நடித்து ஏமாற்று வேலை­களில் ஈடு­படும் மோச­டி­கள் ஆகி­யவை தொடர்­பாக சிங்கப்பூரில் 312 பேரிடம் விசா­ரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சந்­தேக நபர்­கள் $15.7மில் லியன் பெறு­மா­ன­முள்ள 1,175 மோச­டிச் சம்­ப­வங்­களில் ஈடு­பட்­டுள்­ள­னர் என்று நம்­பப்­ப­டு­கிறது.

சந்­தேக நபர்கள் அனை­வ­ரும் 17 முதல் 68 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள் என்று காவல்துறை­யி­னர் கூறி­னர்.

செப்­டம்­பர் 16 தேதி­யி­லி­ருந்து 29ஆம் தேதி­வரை வர்த்­தக விவ­கா­ரப் பிரிவு அதி­கா­ரி­களும் காவல் துறை­யி­ன­ரும் மேற்­கொண்ட சோதனை நட­வ­டிக்­கை­களில் சந்­தேக நபர்­கள் பிடி­பட்­ட­தாக கூறப்­

ப­டு­கிறது.

ஏமாற்­றுக் குற்­றம், கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­றிய குற்­றம் அல்­லது உரி­மம் இல்­லா­மல் கட்­ட­ணச் சேவை வழங்­கிய குற்­றங்­க­ளுக்­காக இவர்­கள் மீது விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது.

இந்­தக் குற்­றச்செயல்­க­ளுக்கு துணை போகா­மல் இருக்க பொது­மக்­கள் மற்­ற­வர் தங்­கள் வங்­கிக் கணக்­கு­கள், கைத்­தொ­லை­பே­சி­கள் போன்­ற­வற்றை பயன்­ப­டுத்த விடுக்­கும் கோரிக்­கை­களை நிரா­க­ரிக்க வேண்­டும் என்று காவல் துறை­யினர் வலி­யு­றுத்­து­கின்­ற­னர்.

இந்­தக் கோரிக்­கை­களை ஏற்று செயல்­பட்டு பின்­னர் அவை குற்­றச்­செ­யல்­க­ளு­டன் தொடர்­பு­டை­யவை எனக் கண்­ட­றி­யும் பட்­சத்­தில் அவர்­களும் குற்­றங்­க­ளுக்கு துணை­போ­ன­தாக கரு­தப்­படும் என்று காவல் துறை­யி­னர் விளக்­கி­னர்.

இவ்­வாண்டு முதல் பாதி­யில் 14,349 மோச­டிக் குற்றங்கள் தொடர்­பாக புகார்­கள் வந்­துள்­ள­தாக காவல் துறை­யி­னர் கூறினர்.

மேலும், கடந்த ஆண்­டின் இதே கால­கட்­டத்­தில் கிடைத்த 7,746 புகார்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இவ்­வாண்டு புகார்களின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட இரு­ம­டங்கு என்­றும் அவர்கள் சுட்­டு­கின்­ற­னர்.

இவ்­வாண்டு முதல் பாதி­யில் மோச­டி­களில் $346.5 மி. அள­வுக்கு இழப்பு ஏற்­பட்­ட­தாக காவல் துறை­யி­னர் தெரி­விக்­கின்­ற­னர்.

கடந்த 2021ஆம் ஆண்டு முழு­

வ­தற்­கும் மோச­டி­களில் ஏற்­பட்ட இழப்பு $633.3 மில்­லி­ய­னாக இருக் கிறது. இவ்­வாண்­டின் முதல் பாதியில் ஏற்­பட்ட இழப்பு சென்ற ஆண்டு முழு­வ­தும் ஏற்­பட்ட இழப்­பில் பாதிக்­கும் மேல் என்­பதை காவல் துறை­யி­னர் சுட்­டிக் காட்­டு­கின்­ற­னர்.

ஏமாற்­றுக் குற்­றம் ஒவ்­வொன்­றுக்­கும் 10 ஆண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யு­டன் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­றும் குற்­றம் ஒவ்­வொன்­றுக்­கும் 10 ஆண்டு வரை­யி­ல­பான சிறை, $500,000 வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம். உரி­மம் இல்­லாத கட்­டண சேவை வழங்­கு­ப­வ­ருக்கு எதி­ராக $125,000 வரை அப­ரா­தம், 3 ஆண்­டு­கள் வரை­யி­லான சிறைத் தண்­டனை ஆகியன விதிக்கப்படலாம்.