வரிஏய்ப்பு: ஈமச்சடங்கு நிறுவன முதலாளிமீது குற்றச்சாட்டுகள்

வரி­ஏய்ப்பு செய்­த­தாக பிர­பல ஈமச்­ச­டங்கு நிறு­வன உரி­மை­யா­ள­ரான 75 வயது ஆட­வர் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

டே ஹாய் சூன் (படம்) எனப்­படும் அவர் $427,000க்கும் மேல் வரு­மான வரி ஏய்ப்­பில் ஈடு­பட்­ட­தா­க­வும் அவர் தமது வர்த்­த­கத்தை ஜிஎஸ்டி வரிக்­கட்­ட­மைப்­பில் பதிவு செய்­யத் தவ­றி­ய­தா­க­வும் குற்­றச்­சாட்­டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

'டைரக்ட் ஃபியூனரல்' எனப்­படும் நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ள­ரான அவர் வரி­ஏய்க்­கும் நோக்­கத்­தில் தமது வரு­மா­னத்­தைக் குறைத்து அறி­வித்­த­தாக மூன்று குற்­றச்­சாட்­டு­கள் அவர்­மீது சுமத்­தப்­பட்­டன.

கடந்த 2011ஆம் ஆண்­டு­மு­தல் 2013ஆம் ஆண்­டு­வ­ரை­யி­லான மூன்­றாண்டு காலத்தில் 2.2 மில்­லி­யன் வெள்­ளியை அவர் கணக்­கில் காட்­ட­வில்லை. அதன்­மூ­லம், $427,427 தொகையை வரி­யாக அவர் செலுத்­தத் தவ­றி­னார்.

இது தவிர, 2010ஆம் ஆண்டு தமது நிறு­வ­னத்­தின் பொறுப்­பு­களை ஜிஎஸ்டி கட்­ட­மைப்­பில் பதிவு செய்­யு­மாறு ஜிஎஸ்டி தலைமை அதி­காரி அலு­வ­ல­கத்­திற்கு அறி­விக்க அவர் தவ­றி­னார். இதன்­மூ­லம் செலுத்­தப்­ப­டாத வரி­யின் மதிப்பு $286,963.

வரு­மான வரிப்­ப­டி­வத்­தில் பொய்­யான அறி­விப்பு செய்­தது நிரூ­பிக்­கப்­பட்­டால் இவ­ருக்கு மூன்­றாண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் $10,000 வரை­யி­லான அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம். இவற்­று­டன், வரி­ஏய்ப்பு செய்த தொகை­யைக் காட்­டி­லும் மூன்று மடங்கு அவ­ருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

வர்த்­த­கம் ஒன்று ஜிஎஸ்­டிக்­காக பதிவு செய்­யப்­பட வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டால் அதனை பதிவு செய்­ய­வேண்­டும். தவ­றி­னால், பதிவு செய்­யு­மாறு அறி­விக்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்து செலுத்­தப்­பட வேண்­டிய வரித்­தொ­கையை பத்து மடங்­காக அப­ரா­தம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கும்.

நீதி­மன்­றத்­தில் நேற்று குற்­றம் சுமத்­தப்­பட்ட டே $80,000 பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். இந்த வழக்கு மீண்­டும் அக்­டோ­பர் 18ஆம் தேதி நீதி­மன்­றத்­தில் விசா­ரிக்­கப்­படும்.

வழக்­க­மாக மேற்­கொள்­ளப்­பட்ட தணிக்கை நட­வ­டிக்­கை­யின்­போது டேயின் குற்­றங்­கள் வெளிச்­சத்­துக்கு வந்­த­தாக சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் நேற்று தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

மேலும், முந்­திய ஆண்­டின் வரு­மா­னத்தை தவ­றின்றி அறி­விக்­கு­மாறு வர்த்­தக முத­லா­ளி­க­ளை­யும் தனிப்­பட்­ட­வர்­க­ளை­யும் அது வலி­யு­றுத்­திக் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!