தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கணவரைக் கொன்றதாக பெண்மீது தொடரப்பட்ட வழக்கு நிறுத்திவைப்பு

2 mins read
797046c9-521e-4d0f-b15f-c2283a9f7be6
சீனாவைச் சேர்ந்த வாங் ஷுஸென், 57. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த 2019ஆம் ஆண்டு தமது 63 வயது கண­வ­ரைக் கொலை செய்­த­தா­கக் குற்­றம் சுமத்­தப்­பட்டு இருந்த பெண், சம்­ப­வம் நடை­பெற்ற வேளை­யில் தெளி­வற்ற மன­நி­லை­யில் இருந்­த­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தம்­மைத் தற்­காக்க இய­லாத நிலை­யில் அவர் இருந்­த­தா­க­வும் மன­ந­லக் கழ­கம் சான்று அளித்­துள்­ளது.

அத­னைத் தொடர்ந்து சீன நாட்­டுப் பெண்­ணான வாங் ஷுஸென், 57, என்­ப­வர்­மீது தொடுக்­கப்­பட்ட வழக்­கின் விசா­ர­ணையை நிறுத்தி வைக்க உயர் நீதி­மன்­றம் நேற்று உத்­த­ர­விட்­டது.

மேலும், இந்த வழக்கு பற்றி சட்ட அமைச்­ச­ருக்­குத் தெரி­விக்­கு­மா­றும் அமைச்­ச­ரின் உத்­த­ரவு வரும் வரை சாங்கி சிறைச்­சா­லை­யில் அந்­தப் பெண்ணை தடுத்து வைக்­கு­மா­றும் நீதி­மன்­றம் தமது உத்­த­ர­வில் குறிப்­பிட்­டது.

2019 அக்­டோ­பர் 27ஆம் தேதி அதி­காலை நேரம் தமது அங் மோ கியோ வீட்­டில் முன்­னாள் காவ­ல­ரான டே ஹாக் பைன் எனப்­படும் தமது கண­வ­ரைக் கொலை செய்­த­தாக அந்­தப் பெண் மீது முன்­னர் குற்­றம் சாட்­டப்­பட்டு இருந்­தது.

தற்­போது, நோக்­க­மில்லா மர­ணம் விளை­வித்த குற்­றச்­சாட்டை அவர் எதிர்­நோக்­கு­கி­றார். சம்­ப­வத்­தன்று அந்­தப் பெண் 2.6 கிலோ­கி­ராம் எடை­யுள்ள கண்­ணாடி பந்து ஒன்­றால் தமது கண­வ­ரின் தலை­யில் குறைந்­த­பட்­சம் மூன்று தடவை தாக்­கி­ய­தா­கக் குற்­றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

வழக்கு விசா­ர­ணைக்­குத் தயா­ரா­கும் நிலை­யில் இருக்­கி­றாரா என்று சான்­றி­தழ் பெறும் நோக்­கில் அந்­தப் பெண்ணை உள­வி­யல் கண்­கா­ணிப்­பில் வைக்­கு­மாறு கடந்த ஆகஸ்ட் மாதம் அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் விண்­ணப்­பித்து இருந்­தார்.

முன்­ன­தாக, அந்­தப் பெண் மன­ரீ­தி­யா­கப் பாதிக்­கப்­பட்­ட­தற்­கான அறி­குறி காணப்­பட்­ட­தாக மன­ந­லக் கழ­கம் தெரி­வித்து இருந்­தது.