விமானத்தில் வெடிகுண்டு புரளி: அமெரிக்கர்மீது குற்றச்சாட்டு

விமானத்தில் வெடிகுண்டு புரளி: அமெரிக்கர்மீது குற்றச்சாட்டு

1 mins read
97cccb47-9fa3-43f3-b3d9-ec9febce08ff
-

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னத்­தில் வெடி­குண்டு வைத்­தி­ருப்­ப­தா­கப் புரளி கிளப்­பி­ய­தா­கக் கைது செய்­யப்­பட்ட 37 வயது ஆட­வர்­மீது நேற்று முன்­தி­னம் நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது. பீதி­யைக் கிளப்­பி­ய­தா­க­வும் விமான ஊழி­ய­ருக்கு வேண்­டு­மென்றே காயம் விளை­வித்­த­தா­க­வும் லா ஏன்டி ஹியென் என்­னும் அந்த அமெ­ரிக்­கர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. கடந்த புதன்­கி­ழமை சான் ஃபிரான்­சிஸ்கோ நக­ரி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கிய எஸ்கியூ 33 என்­னும் விமா­னத்­தில் அவர் பய­ணம் செய்­தார். அந்த விமா­னத்­தில் மொத்­தம் 208 பய­ணி­கள் இருந்­த­னர். சிங்­கப்­பூர் நேரப்­படி செவ்­வாய்க்­கி­ழமை பிற்­ப­கல் 1.26 மணிக்கு அந்த விமா­னம் சான் ஃபிரான்­சிஸ்கோ நக­ரி­லி­ருந்து புறப்­பட்­டது. சிங்­கப்­பூர் வந்து சேரு­வ­தற்கு ஆறு மணி நேரம் முன்­ன­தாக லா தமது கைப்­பை­யில் வெடி­குண்டு இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார். அவ­ரது மன­நி­லை­யைப் பரி­சோ­திக்க மன­ந­லக் கழ­கத்­தில் அவர் அனு­ம­திக்­கப்­பட்­டார்.