சிங்கப்பூர்-மலேசிய விமானப் படைகள் இருதரப்பு தேடி மீட்புப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளன. 'மல்சிங்' (MALSING) தேடி மீட்புப் பயிற்சி (SAREX) என்ற அந்தப் பயிற்சி செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 1 வரை மலேசியாவில் உள்ள குவாந்தான் விமானத்தளத்தில் நடந்தது.
இந்த ஆண்டு பயிற்சியில் சிங்கப்பூர் குடியரசு விமானப் படையின் ஹெச்225எம் ஹெலிகாப்டர் கலந்துகொண்டது.
கொவிட்-19 தலைகாட்டிய பிறகு முதன்முதலாக இரு நாட்டு விமானப்படைகளின் வீரர்கள் அந்த நான்கு நாள் பயிற்சியில் நேரடியாகக் கலந்து கொண்டனர். இந்த இரு நாட்டு பயிற்சி இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால, மனமுவந்த தற்காப்பு உறவுகளை எடுத்துக்காட்டுவதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்து உள்ளது.

