‘இணைய மிரட்­டல்­களை முறி­ய­டிக்க அடித்­தள முயற்­சி­கள் தேவை’

வாழ்க்­கை­யின் வச­தி­களை தொழில்­நுட்­பம் நமக்கு எளி­மை­யாக்­கியுள்­ளது என்­றா­லும் அதே தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி மோசடி போன்ற குற்­றங்­களும் நிகழ்த்­தப்­படு­கின்­றன. இந்த இணைய மிரட்­டல்­களை முறி­ய­டிக்க வேண்­டு­மா­னால், பொதுத் தக­வ­ல­றிவு முக்­கிய பங்கு வகிக்­கிறது.

எட்­டா­வது சமூக மேம்­பாட்டு மன்­றத்­தில் சட்ட விழிப்­பு­ணர்வு வாரங்­கள் என்ற நேற்­றைய நிகழ்­வில் பேசிய சட்ட இரண்­டாம் அமைச்­சர் எட்­வின் டோங், "இணைய மோச­டி­கள், இணை­யத் தாக்­கு­தல்­கள், தன­றாய தக­வ­லைப் பரப்­பு­தல் போன்­றவை மக்­க­ளின் பணத்­தை­யும் நேரத்­தை­யும் மட்­டும் குறி­வைப்­ப­தில்லை. மாறாக, அவை சமூக ஒற்­று­மை­யைக் கீழ­றுக்­கிறது. ஒரு­வர் மற்­றர் மீது அவ­நம்­பிக்கை கொள்­ளும்­போது மக்­க­ளி­டையே உள்ள நெருக்­கத்­தில் விரி­சல் ஏற்­ப­டு­கிறது.

இல­வச சட்ட சேவை வழங்­கும் சுமார் 200 வழக்­க­றி­ஞர்­கள், பங்­கா­ளி­கள், விருந்­தி­னர்­கள் முன் பேசிய கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­ச­ரு­மான திரு டோங், "மின்­னி­லக்­கத் தளம் ஆபத்து நிறைந்­த­தாக உள்­ளது. ஒரு­வர் அதை முறை­யா­கப் பயன்­ப­டுத்­தும் முறையை அறிந்­தி­ரா­வி­டில், அது மிகப் பெரிய பிரச்­சி­னை­களை உண்­டாக்கி வாழ்­வில் மறக்­க­மு­டி­யாத அனு­ப­வத்தை ஏற்­ப­டுத்­தி­வி­டும்," என்­றார்.

இந்த ஆண்டு இடம்­பெ­றும் சட்ட விழிப்­பு­ணர்வு தொட­ரில் பொது­மக்­க­ளுக்கு இணைய பாது­காப்பு குறித்­தும் அடிப்­படை சட்ட தக­வ­ல் அறி­வும் போதிக்கப்­படும். கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் இம்­மா­தம் 27ஆம் தேதி வரை 11 இணை­யக் கருத்­த­ரங்­கு­கள் இந்­தத் தலைப்பு தொட்டு நேர­லை­யா­கக் காட்­டப்­பட்­டன.

இவ்­வாண்டு ஜன­வரி முதல் ஜூன் வரை 14,349 இணைய மோச­டிச் சம்­ப­வங்­கள் பதி­வா­யின. கடந்த ஆண்டு இந்த எண்­ணிக்கை 7,746 ஆக இருந்­தது.

ஐந்து சமூக மேம்­பாட்டு மன்­றங்­கள், சிங்­கப்­ப­பூர் வழக்­க­றி­ஞர் சங்க இல­வச சட்ட சேவைப் பிரிவு, சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் நிறு­வன வழக்­க­றி­ஞர் சங்­கம் ஆகி­யவை இணைந்து இந்த தொடர் விழிப்­பு­ணர்வு இயக்­கத்தை நடத்து­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!