பெண் தொழில்­மு­னை­வர்­களை ஆத­ரித்த தீபா­வ­ளிச் சந்தை

அனுஷா செல்­வ­மணி

பெண் தொழில்­மு­னை­வர்­களை ஊக்­கு­விக்­கும் நோக்­கில் நேற்று முன்­தி­னம் சிங்­கப்­பூர் இந்­தி­யர் சங்­கம் தனது வளா­கத்­தில் தீபா­வளி சந்­தையை ஏற்­பாடு செய்­துள்­ளது.

தீபா­வளி ஒளி­யூட்­டுக்­காக குத்து­வி­ளக்கேற்றி சமூ­கத்தை ஒன்­றி­ணைக்­கும் நோக்­கத்­தில் 37 வெவ்­வேறு தொழில்­மு­னை­வர்­கள் சங்­கத்­தின் தரைத்­த­ளத்­தில் தங்­க­ளின் சிறிய கடை­களை அமைத்து வாடிக்­கை­யா­ளர்­களை வர­வேற்­றார்­கள்.

கிட்­டத்­தட்ட 100 பேர் கலந்­து கொண்ட இந்த நிகழ்ச்­சி­யில், ஆடை­கள், பல­கா­ரங்­கள், அணி­கலன்­கள், வாச­னைத் திர­வி­யங்­கள் போன்ற பொருள்­கள் கடந்த சனிக்­கி­ழ­மை­யும் நேற்­றும் விற்­கப்­பட்­டன.

"என்­னைப் போல் இணை­யத்­தில் வர்த்­த­கங்­களை நடத்தி வரும் பெண்­க­ளுக்கு இந்த முயற்சி ஒரு சிறந்த தள­மாக அமை­கிறது. என் வணி­கத்­தைப் பற்றி பெரி­தும் கேள்­விப்­ப­டா­த­வர்­கள், இந்­தச் சந்­தைக்கு வந்து நான் விற்­கும் பல­கா­ரங்­களை வாங்­கும்­போது எனக்கு மிக­வும் பெருமையாக உள்­ளது. மேலும், பெண்­கள் ஒன்­றி­ணை­யும்­போது நாங்­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் ஊக்கம் தந்து ­எங்­கள் வணி­கத்தை மேம்­ப­டுத்­திக்­கொள்­கி­றோம்," என்று பகிர்ந்­தார் ஸ்வீட் & சேசி Pte Ltd (Sweet & Sassy) நிறு­வ­னத்தை நடத்­தும் திரு­மதி சந்­தியா, 46.

சிங்­கப்­பூர் இந்­தி­யர் சங்­கத்­தின் துணைத் தலை­வர் திரு பார்த்­தி­பன் முரு­கை­யன் தம் துணை­வி­யா­ரோடு நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­துக்­கொண்­டார்.

சங்க உறுப்­பி­னர்­களும் அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ரும் நண்­பர்­களும் நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்­த­னர்.

சிங்­கப்­பூர் இந்­தி­யர் சங்­கத்­தின் துணைத் தலைவி திரு­மதி ஜெயந்தி மணி­யன், 51, "நோய்த்­தொற்­று கார ணமாக பாதிக்கப்பட்ட வர்த்தங் களுக்கு ஆத­ரவு அளிக்­கும் நோக்­கத்­தில் சங்­கத்­தின் மக­ளிர் பிரிவு தீபா­வ­ளிச் சந்­தைக்கு ஏற்­பாடு செய்­தது," என்று தமிழ் முர­சி­டம் பகிர்ந்­துக்­கொண்­டார்.

வார­யி­று­தி­யின் இரண்டு நாள்­களுக்­கும் சந்­தை­யில் வாடிக்­கை­யா­ளர்­கள் திரண்டு அமோக ஆதர வளித்­த­தைப் பார்க்­கும்­போது, பெண்­க­ளுக்கு உத­வும் வகை­யில் மேலும் பல நட­வ­டிக்­கை­களை ஏற்­பாடு செய்ய எங்­கள் மக­ளிர் பிரிவு பரி­சீ­லித்து வரு­கிறது என்­றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!