தமிழ், மலாய், சீன ஊடகங்களைக் காப்பாற்ற அரசு ஆதரவு அவசியம்: இந்திராணி ராஜா

பொதுச் செலவுகளை அரசாங்கம் நிர்வகிப்பது குறித்தும் ஸ்போர்ட்ஸ் ஹப், எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் பரிவர்த்தனைகள் மீது ஆட்சேபம் தெரிவித்தும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் முன் வாய் தெரிவித்த குற்றச் சாட்டுகள் அடிப்படை ஆதார மற்றறவை என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றக் கூட்டம் முடிவுறும்போது சிங்கப்பூர் முன் னேற்றக் கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஆற்றிய உரைக்கு அவர் பதிலளித்தார்.

"இந்த முடிவுகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை அர சாங்கம், நாடாளுமன்றம் உட்பட பல சந்தர்ப்பங்களில் விளக்கி யிருக்கிறது," என்று அமைச்சர் இந்திராணி ராஜா சுட்டிக்காட்டினார்.

இரண்டாம் நிதி அமைச்சருமான அவர், லியோங்கின் மதிப்பீடுகள் மக்களுக்கு தவறான வழியைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

"அரசாங்கம் சொன்னதை லியோங் புரிந்துகொள்ளாமல் பேசினால் அது சிங்கப்பூரர்களையும் குழப்பும், அரசாங்கத்திற்கும் சேதத்தை ஏற்படுத்தும். இந்தப் போலியான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் நிராகரிக்க வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.

திரு லியோங், சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் சீரமைக்கப்படும் போது ஊடக வர்த்தகத்துக்குத் தேவையான நிதி ஆதாரத்தை விட்டுச்செல்லாமல் அரசாங்கம் ஒப்புக்கொண்டிருக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

ஸ்போர்ட்ஸ் ஹப் ஒப்பந்தம் தொடர்பில் பேசிய அவர், அதன் சந்தை மதிப்பைவிட அரசாங்கம் அதிகம் கொடுத்தாகக் கூறினார்.

வரி செலுத்துபவர்களின் பணம் வீணாவதற்கு வழிவகுக்கும் அர சாங்கத்தின் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து கவலைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலாக பணத்தை சேமித்தால் சிங்கப்பூரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு இரண்டு விழுக்காடு பொருள் சேவை வரி யிலிருந்து விலக்கு அளித்திருக்க லாம் என்று அவர் கூறினார்.

ஆனால் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் திரு லியோங் பேசுவதை அமைச்சர் இந்திராணி ராஜா ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.

"எஸ்பிஎச் மீடியா மறுசீரமைப்பும் அரசாங்கத்தின் $900 மில்லியன் நிதியும் உள்ளூர் செய்தி ஊடகங் களை மேம்படுத்தி நிலைநிறுத்த வேண்டியது அவசியமான ஒன்று. அப்போதுதான் நம்பகமான வளங் களிலிருந்து சிங்கப்பூரர்களுக்கு நம்பகமான தகவல்கள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

மலாய், சீனம், தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழி பத்திரிகைகளுக்கு ஆதரவு அளிப்பதும் முக்கியம். இவை, தாய்மொழியையும் கலா சாரத்தையும் கட்டிக்காப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

"எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் சீரமைப்பதில் பங்குதாரர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்து இருந்தால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் போயிருக்க லாம்," என்று அமைச்சர் இந்திராணி ராஜா விளக்கினார்.

"அடுத்த ஆண்டு சீன நாளிதழ் சாவ் பாவ் 100வது ஆண்டு விழா வைக் கொண்டாடுகிறது. பெரித்தா ஹரியான் அதன் 66வது ஆண்டை யும் தமிழ் முரசு அதன் 88வது ஆண்டையும் கொண்டாடுகின்றன. இந்தப் பத்திரிகைகள் தொடர வில்லையென்றால் அது பேரிழப்பாக இருக்கும். உள்ளூர் ஊடகத் துறை எதிர்நோக்கும் உண்மை நிலவரத்தை திரு லியோங் அங்கீகரிக்கத் தவறி விட்டார்.

"எஸ்பிஎச் மீடியா சரிவின் பாதையில் சென்றால் சீன, மலாய் மற்றும் தமிழ் ஊடகங்கள் இல்லாமல் போய்விடும். இது தேசிய நலனுக்கு உகந்தது அல்ல," என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா மேலும் தெரிவித்தார்.

ஸ்போர்ட்ஸ் ஹப் விவகாரத்தில் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட தொகை அதிகமில்லை என்று அவர் குறிப் பிட்டார்.

திரு லியோங்கின் குற்றச்சாட்டு களுக்கு உடன்படாத அமைச்சர் இந்திராணி, பொது நிதியில் அர சாங்கம் தொடர்ந்து கவனமாகவும் விவேகமாகவும் இருந்ததால்தான் கடன் வாங்காமல் கொவிட்-19 தொற்றுநோயை கடந்து செல்ல நாட்டை வழி நடத்த முடிந்தது.

பொதுவான விவரங்களை வைத்து ஸ்போர்ட்ஸ் ஹப், எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் விவகாரங்களுடன் சம்பந்தமில்லாமல் பொருள் சேவை வரி விவகாரங்களை இணைத்து திரு லியோங் பேசியிருப்பதாக இந்திராணி ராஜா கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!