சுவைபானக் கலன்களை மறுசுழற்சி செய்ய நாடெங்கும் முகப்புகள் அமைக்கப்படும்

சுவைபானக் கலன்களை மறுசுழற்சி செய்ய நாடெங்கும் முகப்புகள் அமைக்கப்படும்

2 mins read
05aac1eb-d7e1-43ea-94a3-7a7d3f276c05
சமூக நிலையங்கள், அடுக்குமாடி தரைத்தளங்கள், விளையாட்டு நிலையங்கள், உணவங்காடிகள், உள்ளிட்ட பொது இடங்களில் மறுசுழற்சி முகப்புகளை அமைப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சுவை பானங்­களை அருந்­திய பின்­னர் காலி டின், பாட்­டில்­க­ளைக் கொடுத்து பணம் பெறக்­கூ­டிய மறு­சு­ழற்சி முகப்­பு­கள் விரை­வில் உண­வங்­கா­டி­கள், உணவு நிலை­யங்­கள், அடுக்­கு­மாடி தரைத்­த­ளங்­கள், பேரங்­கா­டி­கள் ஆகியவற்றில் அமைக்­கப்­பட உள்­ளன.

தேசிய சுற்­றுப்­புற வாரியம் பரிந்­து­ரைத்­துள்ள மறு­சு­ழற்சி திட்­டத்­தின்­கீழ், 150 மில்­லி­லிட்­டர் முதல் 3 லிட்­டர் வரை கொள்­ள­ளவு கொண்ட பிளாஸ்­டிக் பாட்­டில்­க­ளி­லும், உலோக கேன்­க­ளி­லும் உள்ள சுவை பானங்­க­ளின் விலை கூடும்.

அவற்றின் விலை­யில் 10 காசு முதல் 20 காசு வரை­யி­லான சிறிய வைப்­புத்­தொகை சேர்க்­கப்­படும்.

வெற்று டின்­கள், பாட்­டில்­கள் உள்­ளிட்ட க­லன்­களை ஊழி­யர்­கள் கையா­ளும் முகப்­பு­கள் அல்­லது தானி­யக்க இயந்­தி­ரங்­களில் கொடுத்து வாடிக்­கை­யா­ளர்­கள் இந்த வைப்­புத் தொகை­யைத் திரும்­பப் பெற­லாம்.

ஆண்­டு­தோ­றும் ஒரு பில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான கொள்­க­லன்­கள் சேக­ரிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக, நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

இத்­திட்­டம் 2024க்குள் செயல் படுத்­தப்­ப­ட­லாம்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள கிட்­டத்­தட்ட 400 பெரிய பேரங்­கா­டி­கள், இங்­குள்ள மொத்­தப் பேரங்­கா­டி­களில் மூன்­றில் இரண்டு பங்கு வகிக்­கின்­றன.

அப்­பெ­ரிய பேரங்­கா­டி­கள் சுவை­பான கொள்­க­லன் மறு­சு­ழற்சி முகப்­பு­களை வைப்­பது கட்­டா­ய­மாக்­கப்­ப­ட­லாம் என்று டாக்­டர் கோர் கூறி­னார்.

பொட்­ட­ல­மி­டப்­பட்ட பானங்­களில் மூன்­றில் ஒரு பங்கு பேரங்­கா­டி­களில் வாங்­கப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், அங்கு மறு­சு­ழற்சி முகப்­பு­களை அமைப்­பது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சுல­ப­மா­ன­தாக இருக்­கும் என்­றார்.

சமூக நிலை­யங்­கள், அடுக்­கு­மாடி தரைத்­த­ளங்­கள், விளை­யாட்டு நிலை­யங்­கள், உண­வங்­கா­டி­கள், காப்பிக் கடை­கள் உள்­ளிட்ட பொது­வில் அணு­கக்­கூ­டிய பிற இடங்­களும் பரி­சீ­லிக்­கப்­ப­டு­கின்­றன.

சாதா­ரண உணவு, பானக் கடைக்­கா­ரர்­க­ளுக்­கும் நிர்­வா­கி­ களுக்­கும் நீக்­குப்­போக்கு வழங்­கப்­படும் என்றார் டாக்­டர் கோர் .

"உதா­ர­ண­மாக, கடைக்­கா­ரர்­கள் பானத்­து­டன் கொள்­க­ல­னுக்­கான வைப்­புத்­தொ­கையை வசூ­லிக்­க­லாம். அப்­போது வாடிக்­கை­யா­ளர்­கள் வெற்று பானக் கொள்­க­லன்­களை மறு­சு­ழற்சி முக­ப்­பு­களில் கொடுத்து பணம் பெற­லாம்," என்று அவர் சொன்­னார்.

காப்­பிக் கடை­கள், உண­வங்­கா­டி­கள் போன்ற சாதா­ரண இடங்­க­ளுக்கு இது பொருந்­தும்.

குவ­ளை­களில் பானம் வழங்­கப்­ப­டும்­போது கட்­ட­ணம் இருக்­காது.

உணவு, பான வளா­கங்­களை நடத்­து­ப­வர்­களை இந்த மறு­சு­ழற்­சித் திட்­டத்­துக்கு ஆயத்­தப்­ப­டுத்த, தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் திட்­டத்தை வழிந­டத்­து­ப­வர்­க­ளு­டன் இணைந்து செயல்­படும் என்று டாக்­டர் கோர் கூறி­னார்.