ஹலிமா: ஊழியரணியில் மகளிர் நீடிக்க நீக்குப்போக்கான வேலை நடைமுறை உதவும்

பெரும்­பா­லான வீடு­களில் இன்­ன­மும் பிர­தான பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளாக உள்ள மக­ளிர், ஊழி­ய­ர­ணி­யில் சேர்ந்து அதில் நீடிக்க அதிக வாய்ப்பு இருப்­ப­தாக அதி­பர் ஹலிமா யாக்­கோப் கூறி­யி­ருக்­கி­றார்.

வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வது போன்ற நீக்­குப்­போக்­கு­டைய வேலை நடை­மு­றை­க­ளைக் கூடு­த­லான முத­லா­ளி­கள் இப்­போது கடைப்­பி­டிக்­கின்­ற­னர். இச்­சூ­ழ­லில் ஊழி­ய­ர­ணி­யில் மக­ளி­ரைத் தக்­க­வைத்­துக்­கொள்­வ­தில் கூடு­தல் கவ­னம் செலுத்­தப்­பட வேண்­டும் என்று திரு­வாட்டி ஹலிமா சொன்­னார்.

இஸ்­தா­னா­வில் என்­டி­யுசி மக­ளிர் குழுத் தலை­விக­ளு­டன் நேற்று நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது அவர் இக்­க­ருத்தை முன்­வைத்­தார்.

"ஊழி­ய­ர­ணி­யில் இருந்து வெளி­யேறி ஆண்­டுக்­க­ணக்­கில் மக­ளிர் வேலை­யின்றி இருந்­தால், அவர்­களுக்கு மீண்­டும் பயிற்சி அளித்து, வேக­மாக மாறி­யுள்ள ஊழி­ய­ர­ணி­யில் அவர்­களை மீண்­டும் இணைப்­பது மிக­வும் சிர­ம­மா­கி­வி­டும்.

"என­வே­தான், ஊழி­ய­ர­ணி­யில் அவர்­க­ளைத் தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­கான வழி­மு­றை­களை நாம் தேட­வேண்­டும். இதில்­தான் நீக்­குப்­போக்­கான வேலை நடை­முறை­கள் முக்­கி­ய­ பங்கு வகிக்­கின்­றன," என்­றார் திரு­வாட்டி ஹலிமா.

மக­ளிர் ஊழி­யர்­க­ளின் மனக்­கு­றை­க­ளைச் செவி­ம­டுக்­க­வும் ஆண்-பெண் ஏற்­றத்­தாழ்வு சரி­செய்யப்­ப­டு­வதை உறு­தி­செய்வதிலும் மக­ளிர் தலை­விகள் முக்­கிய பங்கு வகிப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"ஆண்­க­ளை­யும் பெண்­க­ளை­யும் மக்­கள் எப்­படி பார்க்­கின்­ற­னர் என்­ப­தன் தொடர்­பி­லான மனப்­போக்கை நாம் மாற்ற வேண்­டும். எடுத்­துக்­காட்­டாக, பரா­ம­ரிப்­பா­ளர் பொறுப்பு­களும் வீட்டு வேலை­களும் இன்­ன­மும் மக­ளி­ரின் பொறுப்­பா­கக் கரு­தப்­ப­டு­கின்­றன," என்­றார் திரு­வாட்டி ஹலிமா.

தொழி­லா­ளர் இயக்­கத்­தில் பாதிப் பேர், அதா­வது 298,000 பேர் மக­ளி­ராக உள்­ள­னர்.

"இத்­த­கைய வலு­வான எண்­ணிக்கை மூலம், வேலை­யி­டங்­களிலும் சமு­தா­யத்­தி­லும் மக­ளி­ரைப் பாதிக்­கும் விவ­கா­ரங்­களில் குரல்­கொ­டுக்க மக­ளிர் தொழிற்­சங்­க­வா­தி­கள் நல்ல நிலை­யில் உள்­ள­னர்," என்று திரு­வாட்டி ஹலிமா கூறி­னார்.

குடும்ப உறுப்­பி­னர்­க­ளைப் பார்த்­துக்­கொள்­ளும் பொறுப்­பு­டை­ய­வர்­களுக்கு கூடு­த­லான முத­லா­ளி­கள் ஆத­ர­வ­ளிப்­பர் என தாம் நம்­பு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!