அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனம் விரிவு; 100க்கு மேற்பட்ட புதிய வேலைகள் உருவாகும்

அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனம் விரிவு; 100க்கு மேற்பட்ட புதிய வேலைகள் உருவாகும்

2 mins read
bcb7c9f0-bced-4a2b-8e5f-7c3dedeaf33a
-

முன்­னணி அமெ­ரிக்க மருந்து தயா­ரிப்பு நிறு­வ­ன­மான எம்­எஸ்டி, துவா­சில் உள்ள தனது தயா­ரிப்பு ஆலையை $280 மில்­லி­யன் செல­வில் விரி­வு­ப­டுத்­து­கிறது.

அந்­நி­று­வ­னம் புதி­ய­ பொதி­யாக்க (பேக்­கே­ஜிங்) வசதியை நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

அத்­து­டன், அந்­நி­று­வ­னத்­தின் புதிய தலை­முறை உறிஞ்­சு­மருந்து தயா­ரிப்பு ஆலைக்­கான நில அகழ்வு நிகழ்ச்­சி­யும் நேற்று இடம்­பெற்­றது.

அந்­நி­கழ்­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், எம்­எஸ்­டி­யின் முத­லீட்­டால் உள்­ளூ­ரில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட புதிய வேலை­கள் உரு­வாக்­கப்­படும் என்­றார்.

இத­னை­ய­டுத்து, சிங்­கப்­பூ­ரில் அந்­நி­று­வ­னத்­தில் பணி­பு­ரி­வோர் எண்­ணிக்கை 1,800க்கு மேற்­பட்­ட­தாக உய­ரும்.

இந்த விரி­வாக்­கத்­தின்­மூ­லம் சிங்­கப்­பூ­ரில் எம்­எஸ்டி நிறு­வ­னத்­தின் மொத்த முத­லீடு $3 பில்­லி­யனைத் தாண்­டும் என்று அமைச்­சர் கான் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் மேலும் $700 மில்லி­யனை முத­லீடு செய்ய எம்­எஸ்டி நிறு­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது.

கடந்த 2020ஆம் ஆண்­டில் தொடங்­கிய அத்­திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக துவாஸ் ஆலை விரி­வாக்­கம் இடம்­பெ­று­கிறது.

புதிய உறிஞ்­சு­ம­ருந்து தயா­ரிப்பு ஆலை 2026ஆம் ஆண்­டி­லி­ருந்து செயல்­ப­டத் தொடங்­கும்.

எம்­எஸ்டி நிறு­வ­னத்­தின் முக்­கி­யத் தயா­ரிப்பு மையங்­களில் ஒன்­றாக சிங்­கப்­பூர் திகழ்­கிறது என்று திரு கான் குறிப்­பிட்­டார்.

அதன் முதன்­மை­யான பத்­துப் பொருள்­களில் ஏழு சிங்­கப்­பூ­ரில் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

அர­சாங்­கத்­தின் கவ­ன­மான திட்­ட­மி­டல், ஒழுங்­கு­முறை நட­வடிக்­கை­களே உலக அள­வில் போட்­டித்­தன்­மை­மிக்க உயிர்­ம­ருத்­து­வத் துறை சிங்­கப்­பூ­ரில் அமைந்­தி­ருப்­ப­தற்­கான கார­ணம் என்­றார் அமைச்­சர் கான்.

சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் உயிர்­ம­ருத்­து­வத் துறை­யின் பங்கு மூன்று விழுக்­காட்­டிற்­கும் அதி­கம் என்­றும் அனைத்­து­ல­கச் சந்­தை­க­ளுக்­காக $17 பில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான பொருள்­களை அத்­துறை தயா­ரிக்­கிறது என்­றும் அவர் சொன்­னார்.

சிங்­கப்­பூர் உயிர்­ம­ருத்­துவத் துறை­யில் இப்­போது ஏறக்­கு­றைய 9,000 பேர் பணி­பு­ரி­கின்­ற­னர். இது 2000வது ஆண்­டை­விட நான்கு மடங்கு அதி­கம்.